தீயிலிடு தீய எண்ணங்களை..! தூய்மைசெய் உள்ளமதை..! போகி வாழ்த்து..!

போகி என்பது, நாங்கள நாட்கள் கொண்டாடப்படும் தமிழர் திருநாளின் முதல்நாள் கொண்டாட்டமாகும். பழையன கழிதல்;புதியன புகுதல் என்ற கோட்பாடு இதில் அடக்கம்.

Update: 2024-05-25 09:52 GMT

bhogi pongal wishes in tamil-போகி பொங்கல் வாழ்த்து (கோப்பு படம்)

Bhogi Pongal Wishes in Tamil

பொதுவாக தமிழர்களின் பண்டிகைகளில் தொடர்ந்து நான்கு நாட்கள் இந்துக்கள் அனைவரும் கொண்டாடும் ஒரே பண்டிகை பொங்கல் திருநாள் மட்டுமே. அந்த நான்கு நாட்களில் முதலாவதாக கொண்டாடப்படுவது போகி பண்டிகை தான்.

போகி பண்டிகை நாளில் பழையன கழித்தலும்.. புதியன புகுத்தலும் என்ற சொல்லாடலுக்கு ஏற்ப வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரித்துவிடுவார்கள். அதற்குப் பதிலாக புதிய பொருட்கள் வாங்கப்பட்டுவிடும். இதுதான் போகி பண்டிகை ஆகும்.

இந்த போகி பண்டிகை அன்று மாலி நேரங்களில் தெருவெங்கும் பழைய பொருட்களை தீவைத்து எரிப்பார்கள். இதனை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். இந்த போகி மார்கழி மாதத்தின் கடைசி நாள் அதாவது ஜனவரி 14-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த போகி பண்டிகை நாளில் தொலைவில் உள்ள உங்கள் நண்பர்கள், உறவினர்கள், அன்பானவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை கூறுவதற்கு உங்களுக்காக சில வாழ்த்துகளை வழங்கியுள்ளோம். அனுப்பி வாழ்த்தி மகிழுங்கள். 


Bhogi Pongal Wishes in Tamil

வாழ்த்துகள்

தீய எண்ணங்களை தீயிட்டு கொளுத்திவிடுங்கள்.புதிய சிந்தனைகளை புத்தம் புதிதாக புகுத்திடுவோம். அனைவருக்கும் போகி பண்டிகை வாழ்த்துகள்.

பழைய பகையை மறந்து புதிய உறவை வளர்க்க உறவுகளுடன் கைகோர்த்து உறவினை புதுப்பித்துக்கொள்ளுங்கள். போகி திருநாள் வாழ்த்துகள்.

பழையன கழிதலும் புதியன புகுத்தலும் போகிப்பண்டிகை ஆகும். தீயவை விலக்கி நல்லவை சேர்ப்போம். போகி பொங்கல் நல்வாழ்த்துகள்

நம்மைச் சூழ்ந்த தீமைகள் விலகி ஓடட்டும். நன்மைகள் மட்டுமே தேடி வரட்டும். இனிய போகி நல்வாழ்த்துகள்

பழையன கழிதல் போல பழைய துக்கங்கள் பறந்தோடட்டும். புதியன புகுதல் போல நன்மைகள் சேர்ந்து வரட்டும். போகி திருநாள் வாழ்த்துகள்


வாழ்வின் கஷ்டங்கள் இன்றோடு கழியட்டும். இன்பங்கள் தேடி வரட்டும். மகிழ்வாய் வாழ வழி தரட்டும். இனிய போகி பண்டிகை வாழ்த்துகள்.

 Bhogi Pongal Wishes in Tamil

உறவுகள் சேரா திருநாள் எல்லாம் மனம் சேரா பண்டிகை ஆகும். உறவுகள் சூழ வாழ்வதுதானே மனிதரின் மாண்பு ஆகும். உறவுகள் கூடி ஒன்றாய் வாழ்வோம். பகைமையை தீயில் இட்டு எரிப்போம் வாங்க. இனிய போகி திருநாள் வாழ்த்துகள்.

நண்பனே உன்னைவிட்டு பிரிந்த நாட்களை எண்ணி எண்ணி வருந்துகிறேன். பொங்கிவந்து பாடம் ஒன்றை கற்றுக்கொடுத்தது. வாடா மீண்டும் ஒன்றாய் சேர்வோம். உறவாய் எழுந்து நட்பை வளர்ப்போம். இனிய போகி பண்டிகை வாழ்த்துடா உனக்கு.

மாமா அத்தை மனமுருக மாயவித்தைகள் செய்திடுவோம். உறவாய் வாழ்ந்து மகிழ்ந்திடுவோம். போகி வாழ்த்துகள் மாமா,அத்தைக்கு. எப்போ வருவீங்க எங்கள் மெத்தைக்கு.

சித்தி சித்தப்பா சேர்ந்தே இருந்தாலும் கத்தி நாங்கள் சண்டை போட்டாலும் பண்டிகை என்றால் ஒன்றாய் சேர்வோம். அன்றுதான் வீடே இரண்டாகும், குட்டீஸ்களின் குறும்புகளால். சித்தி சித்தப்பாவுக்கு போகிப்பெருநாள் வாழ்த்துகள்.


போட்டி இல்லை, பொறாமை இல்லை. அன்பு மட்டுமே எங்கள் எல்லை. கூட்டுக்குடும்பமாய் கொண்டாடுவோம், போகி பண்டிகையை. ஊருக்கெல்லாம் வாழ்த்துச் சொல்வோம்.

 Bhogi Pongal Wishes in Tamil

போகி பண்டிகையில் பழையன எரிவதுபோல எங்கள் தீய எண்ணங்கள் எல்லாம் எரிந்துபோகும். நன்மைகள் செய்யும் நல்லெண்ணம் வளரும். போகியில் வளர்ப்போம் சமத்துவ எண்ணம். அனைவருக்கும் போகி திருநாள் வாழ்த்துகள்.

அண்ணனும் தம்பியும் அடித்துக்கொண்டாலும் உறவது என்றும் விலகுவதில்லை. அக்காவும் தங்கையும் முறைத்துக்கொண்டாலும் அந்த உறவும் கெடுவதில்லை. பண்டிகை நாட்களில் பழம்விட்டுக்கொள்வோம். எங்கள் வீடு பலமாகும். உறவுகள் சூழ வாழ்த்துச்சொல்வோம், பொங்கலோ..பொங்கல்..போகிப்பொங்கல்..!

அடைத்த கதவுகள் திறந்தன இன்று. நல்லொளி புகுந்து விடிந்தது இன்று. புதிய ஒளியால் மலர்ந்தது இதயம். வளர்ந்தது பிறருக்கு உதவும் எண்ணம். இருப்பதை பகிர்ந்து வாழ்வோம் நாமே. அனைவருக்கும் போகி பெருநாள் வாழ்த்துகள்.

அள்ளிக்கொடுக்க வேண்டாம் நீ. அன்பாய் இருந்தால் போதுமே. எண்ணிக்கொடுக்க வேண்டாம் நீ. எள்ளி நகையாடாமல் இருந்தால் போதுமே. மனிதம் பேசும் மனிதனே மதங்களால் திரையிடலாமோ..? யாவரும் மனிதர் என்போம் நாம். எல்லோர்க்கும் உதவிகள் செய்வோம். இனிய போகி திருநாள் வாழ்த்துகள். 


அன்பை வளர்ப்போம் அறவழி நடப்போம். பண்பாய் வாழ்வோம். உறவுகள் வளர்ப்போம். பழையதை மறப்போம். புதுமைகள் சேர்ப்போம். அனைவருக்கும் இனிய போகி திருநாள் வாழ்த்துகள்.

அப்பா வந்தார் அன்புடனே. அம்மா வந்தார் அன்னமிட. தாத்தா வந்தார் ஆசீர்வதிக்க. பாட்டி வந்தார் பலகாரம் தந்தார். மாமா வந்தார் காசு கொடுக்க. உறவாய் வாழ்வதில் மகிழ்ச்சி பெருகும். சமத்துவமான சமூகம் உயரும். அனைவருக்கும் இனிய போகிப்பண்டிகை வாழ்த்துகள். 

Tags:    

Similar News