Best Humanity Quotes in Tamil-மனிதாபிமானம் செழிக்க நாம் என்ன செய்யலாம்?
மனிதகுலத்தின் செயல்களுக்குப் பின்னால் புகழ், பணம் அல்லது அதிகாரம் போன்ற எந்தவொரு தனிப்பட்ட லாபமும் இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
Best Humanity Quotes in Tamil
போர், வறுமை, குற்றம், பசி என இன்றைய உலகில் இருக்கும் அனைத்து அநீதிகளாலும், மனிதகுலத்தின் மீதான நம்பிக்கையை நாம் இழந்து வருகிறோம். நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம், “யாரும் செய்யாவிட்டால் நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? எதுவும் மாறுவதாகவோ அல்லது சிறப்பாகச் செய்வதாகவோ தெரியவில்லை, எனவே நாம் உலகை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம் என்று அலட்சியம் காட்டலாம்.
Best Humanity Quotes in Tamil
தற்போதுள்ள அநீதிகளை அங்கீகரிப்பதும், தீர்க்கப்பட வேண்டிய கடுமையான பிரச்சினைகளாகப் பார்ப்பதும் முக்கியம் என்றாலும், அந்தத் தீர்வுகள் யதார்த்தத்தின் ஒரு பகுதியாக மாறுவதைப் பார்ப்பதில் நமது சொந்த பங்கை உணர்ந்து கொள்வதும் முக்கியம். மனிதநேயம் பற்றிய பின்வரும் மேற்கோள்கள் நமக்கு விளக்கமளிக்கலாம் மற்றும் ஊக்கமளிக்கலாம்:
நிறங்களைப் பார்த்தால் மனிதர்களிடம்
நிம்மதி பிறக்குமா மண்ணில்
குலங்கள் பார்த்தால்
குறைகள் நீங்குமா
ஒவ்வொரு ஊரில்
ஜாதிகள் பார்த்தால் நம்மிடத்தில்
ஜெயம் வாழுமா நீதியில்
மேல் இடம் பார்த்தால்
ஏழைகளிடம் மேம்பாடு
இருக்குமா ஏழ்மையில்
மதங்கள் பார்த்தால்
மனிதரிடத்தில் மனிதநேயம்
இருக்குமா மண்ணில்
கருமை நிறைந்த வானம்
இயற்கை என்றால்
கருமை உடலோடு
பிறந்த வாழ்வு இழிவா?
மனிதனாய் வாழ்வதை விட
மனித நேயத்துடன்
வாழ்வதே சிறப்பு
Best Humanity Quotes in Tamil
அழகிய முகங்களை நம்
பார்வையில் தெரிந்து கொள்கிறோம்
அழகிய அகங்களை நாம்
பழகியதில் புரிந்து கொள்கிறோம்
இறப்பால் ஒருவரை
உலகில் இருந்து
அழித்து விட முடியும் ஆனால்
நம் உள்ளத்தில் இருந்து அல்ல
மனிதர்களிடம்
அனுசரித்து செல்ல வேண்டியது
குறைகளை மட்டுமே தவிர
அவர்கள் செய்த குற்றங்களை அல்ல
வாழ்கை பயணம்
எப்போது எங்கு
மர்மமாய் முடியும் என்று
யாருக்கும் தெரியாது
ஆனால்
வாழும் தருணம் எப்படி
அன்பாய் பண்பாய் வாழ்வது
என்று எல்லோரும் பழகிட முடியும்
Best Humanity Quotes in Tamil
சுதந்திரதிற்குப் போராடிய
மன்னர்கள் அன்று
சுவாசத்துக்குப் போராடும்
மருத்துவம் இன்று
பிறருக்கு உதவி செய்யவில்லை
என்றாலும் பரவாயில்லை
உதாசீனம் பண்ணாமல்
இருந்தாலே போதும்
நம் வாழ்க்கையில் என்னவெல்லாம்
இருக்கிறது என்பது முக்கியமில்லை
எத்தனை நல்ல உள்ளம் கொண்ட
மனிதர்கள் நம் அருகில்
இருக்கிறார்கள்
என்பது தான் முக்கியம்
உன் வலியை நீ உணரும்
போது நீ உயிரோடு வாழ்கிறாய்
பிறர் வலியை நீ உணரும்
போது மனிதனாய் வாழ்கிறாய்
Best Humanity Quotes in Tamil
அழகான முகங்களைத் தேடாதே
உன்னை நீ ஏமாற்றி கொள்வாய்
அன்பான உள்ளதைத் தேடு
உன்னில் நீ மாற்றத்தை அடைவாய்
பசி என்பது ஒரு உணர்வு தான்
பணமில்லாமல் ஏற்படும் பசி
உலகத்திலே கொடுமையான
உணர்வாகும்
மண்ணில் மனிதநேயத்தோடு இரு
மனதில் மகிழ்ச்சிகளைச் சேரு
முடிந்த வரை பிறருக்கு உதவ பாரு
எப்போதும் பிறர் மதிக்க வாழு
இன்று உலக பொருளாதாரம்
வளர்ச்சி அடைந்து விட்டது
ஆனால்
உலக மக்களின் உள்ளத்தில்
மனிதநேயம் குறைந்து வருகிறது
வாழ்க்கையில்
பணத்தை மட்டும்
தேடுபவனுக்கு
பிறரின் துன்பம்
என்னவென்று புரியாது
பிறருக்கு உதவும்
மனமும் கிடையாது
Best Humanity Quotes in Tamil
உங்களை புரிந்து கொள்ள
போவதில்லை இவ்வுலகம்
உன்னை பற்றி உலகுக்கு
நீ புரிய வைக்க நினைக்காதே
உன்னை தினமும் நேசிக்க மறக்காதே
காரணத்தோடு வரும் அன்பும்
காரணமில்லாமல் வரும் வெறுப்பும்
கடைசியில் காயங்களை ஏற்படுத்துகிறது
நீ எதையும் எதிர்பார்க்காமல்
பிறருக்கு உதவி செய்தால்
நீ எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்களைக்
கடவுள் உனக்கு கொடுப்பார்
ஒருவர்க்கொருவர் உதவியாக இருந்து
மனிதநேயத்தோடு வாழ்ந்தாலே போதும்
உலகத்தில் அமைதி பெருகும்
உள்ளத்தில் நிம்மதி பிறக்கும்
பொய்களைப் பேசாத்தவர்களையும்
போலியாய் நடிக்காதவர்களையும்
மனிதனாய் மனித நேயத்துடன்
வாழ்பவர்களையும்
பலருக்கும் தெரியவில்லை
Best Humanity Quotes in Tamil
நீ செய்யும் நம்மையை
யாரும் பார்ப்பதில்லை
நீ செய்யும் தீமையை
யாரும் விமர்சிக்காமல்
விடுவதில்லை
நாம் செய்த புண்ணியங்கள்
நம்மை வாழ வைக்கிறது
நாம் செய்த பாவங்கள்
நம் வாழ்க்கையை வீழ்த்துகிறது
உணவு அளித்த பிராணிகளிடம்
இருக்கும் அன்பான உள்ளம் கூட
உதவிய மனிதர்களிடம்
இருப்பதில்லை
பசி என்று வந்தவனுக்கு
நீ வயிறார உணவு பரிமாறினால்
உன் கருணையைப்
பார்த்து மகிழ்ந்து
உன்னை மனசார
வாழ்த்தி செல்வான்
Best Humanity Quotes in Tamil
உனக்கு
அறிமுகமில்லாதவனுக்கும்
அன்னதானம் செய்
உன்னை
தெரியாதவனுக்கும்
ரத்த தானம் செய்
நீ பிறருக்கு செய்த நல்லது
உன்னை ஒருநாள் தேடி வரும்
என்றும் நல்லதை மட்டும் செய்
மண்ணில் மனிதர்கள்
வளமுடன் வாழ வேண்டும்
மனிதர்களின் மனதில்
மனிதநேயம் வளர வேண்டும்
எல்லா உறவுகளின்
பிரிவுக்கு பின்னால்
ஒரு முற்றுப்புள்ளி இருக்கிறது
ஆனால்
யாரோ ஒருவர் மீண்டும் அதில்
ஒரு புள்ளியை வைத்து நம்மை
மீண்டும் வாழ்கை பயணத்தில்
அழைத்து செல்கிறார்கள்
Best Humanity Quotes in Tamil
ஏழை பணமில்லாமல்
வாழ்ந்தாலும்
ஆனால் பாசக்காரனாக
இருப்பான்
பணம் உள்ளவனை
பாராட்டியும்
பாசம் உள்ளவனை
அலட்சியப்படுத்தியும்
பலர் வாழ்கிறார்கள்
இவர்கள் மண்ணில்
மனிதநேயத்தை
அழித்து விடுகிறார்கள்
யாரென்று அறியாத
ஒருவரின் துன்பத்தில்
வரும் கண்ணீரைக் கண்டு
ஏனென்று புரியாமல்
உன் கண்களிலும்
கண்ணீர் வருவதே மனிதநேயம்
குடிசையில் வாழும்
ஏழையிடம்
பணம் இல்லாமல்
இருக்கலாம்
ஆனால் அந்த ஏழையிடம்
இரக்கம் குணம் இருக்கும்
Best Humanity Quotes in Tamil
இறைவன் தனக்கு கொடுத்த
செல்வத்தைப் பிறருக்கும்
பகிர்ந்து கொடுத்து
வாழ்வதில் கிடைக்கும்
மகிழ்ச்சிக்கு
நிகர் வேறுதுவுமில்லை
மற்றவர்கள் நம்மிடம்
மனிதநேயத்தோடு
பழகவில்லை என்றாலும்
நாம் பிறரிடம்
மனிதநேயத்தோடு பழகுவது
நம் குணத்தை
மேலும் அழகாக்கும்