benefits of walking-30 நிமிடம் 'நடந்தால்' இத்தனை நன்மைகளா..? நடங்க..நன்மைகளை அள்ளுங்க..!

benefits of walking-நடை பயிற்சிக்கு எந்த சிறப்பு உபகரணங்களும் தேவையில்லை. நம்ம கால்கள்தான் உபகரணம். ஆதலினால் நடப்போம் வாங்க.

Update: 2023-04-27 05:30 GMT

benefits of walking-நடப்பது உடலுக்கு நன்மைதரும்.(கோப்பு படம்)

நடைபயிற்சி என்பது அனைத்து வயதினரும் செய்யக்கூடிய ஒரு எளிமையான பயிற்சியாகும். இது எந்தவித எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தாத ஒரு இலகுவான செயல்முறையாகும். இந்த பயிற்சியை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்.

benefits of walking


சாலைகளில் நடந்து செல்லலாம். மொட்டைமாடியில் நடக்கலாம். அலுவலகம் செல்பவர்கள் கூடுதல் வேலை இருந்தால் அலுவலக வளாகத்திலேயே அரைமணி நேரம் ஒதுக்கி செய்யலாம். எந்த சிறப்பு உபகரணங்களும் அல்லது அதை சிறப்பாக செய்வதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை.

நடைபயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துகிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இயற்கையுடன் இணைவதற்கும், உங்கள் மனதை தெளிவுபடுத்துவதற்கும், புதிய காற்றை அனுபவிக்கவும் இது ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் நிதானமாக உலா வரலாம். அல்லது விறுவிறுப்பான நடைப்பயணத்தை விரும்பினாலும், உங்கள் தினசரி வழக்கத்தில் நடைபயிற்சி செய்வதன் மூலம் ஏராளமான ஆரோக்ய நன்மைகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்யமான வாழ்க்கை முறைக்கு உதவும் என்பது மறுக்கமுடியாத உண்மைங்க.


அதனால், இன்றைய வாழ்க்கைமுறைக்கு கட்டாயம் நடப்பது நமது உடல் ஆரோக்யத்தை மேம்படுத்திக்கொள்ள ஒரு நல்ல வழி. அட..நடப்போம்ங்க..வாங்க..!

benefits of walking

நடப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பாருங்கள். பயிற்சி முறைகளில் இது ஒரு இலகுவான 'நடை'முறை.

1. ஹார்ட் அட்டாக் வருவதற்கான வழிகளைத் தடுக்கிறது.

2. நமது உடலின் எடையை பராமரிக்க உதவுகிறது.

3. மன உளைச்சலை குறைக்கிறது.

4. நமது ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.


5. உற்சாக மனநிலையில் இருப்பதற்குத் தூண்டுகிறது.

6. இரத்த ஓட்டம் சீராகிறது.

7. உடல் பருமனை தவிர்க்கிறது.

8. மனக்கவலைகளை குறைக்க உதவுகிறது.

9. நுரையீரல் இயக்கத்தை சீராக்குகிறது.

10. உடலுக்குத் தேவையான வைட்டமின் D கிடைப்பதற்கு வழிசெய்கிறது.


11. கேன்சர் ஏற்படுவதை தடுக்கிறது.

12. ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகிறது.

13. நமது ஆரோக்யத்தை கவனித்துக்கொள்ள நேரம் ஒதுக்கித்தருகிறது.

14. ஒருங்கிணைப்பு மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்கிறது,

15. வாழ்க்கைத்தரம் உயர உதவுகிறது.

16. சர்க்கரை பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கிறது.

17. நமது தனித்திறன்களை  கூர்மையாக்குகிறது.


18. எலும்பு மற்றும் தசையை வலுப்படுத்துகிறது.

19. இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவுகிறது.

20. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

benefits of walking

இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்போது, ஒரு அரைமணி நேரம் ஒதுக்கி நாம் நடக்கலாமே.  நமக்கு கிடைத்துள்ள உடலை பேணிக்காப்பது நமது கடமையல்லவா..?

Tags:    

Similar News