beauty tips in tamil-அள்ளக்குறையா அழகுக்கு, இஞ்சி ஒன்றே போதுமுங்க..! லேடீஸ் ஸ்பெஷல்..!

beauty tips in tamil-வயசு போகுதுன்னு கவலைப்படறவங்களுக்கு இஞ்சி ஒரு சிறந்த நிவாரணி. ஆமாங்க உங்கள் இளமையை தக்கவைக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு.;

Update: 2023-06-16 10:48 GMT

beauty tips in tamil-இளமை அழகுக்கு இஞ்சி (கோப்பு படம்)

நாம் பிறந்து உலகுக்கு வந்த அடுத்து நொடிமுதல் நமது வயது கணக்கிடத் தொடங்கிவிடுகிறது. நொடிகள் வினாடிகளாகி , வினாடிகள் மணிகளாகி, மணிகள் நாட்களாகி, நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்கள் ஆகின்றன.

beauty tips in tamil


இப்படி வயது எற எற பலர் தங்கள் இளமை தொலைக்கின்றதே என்று கவலைப்படுவது உண்டு. எண்ணெயில் இளமையும் அழகும் அப்படியே நீடித்து நிற்காது. முடி நரைக்கும். சருமத்தில் சுருக்கங்கள் தோன்றும்.

இப்படி கவலைப்படும் நமக்கு கொஞ்சம் இளமையாக காட்டிக்கொள்ள சில வழிமுறைகள் உள்ளன. அதன்மூலம் இளமையையும், அழகையும் கொஞ்ச நாட்கள் தள்ளிவைக்கலாம் அல்லது தக்கவைக்கலாம். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று பார்க்கலாம் வாங்க.

beauty tips in tamil


இஞ்சி துருவல்

முகத்தின் முதிர்ச்சியை சுருக்கங்கள் காட்டிவிடும்.முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கும் தன்மை இஞ்சிக்கு இருக்கிறது. இஞ்சியில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இது மூலிகை மட்டும் அல்லாமல் டோனிங் செய்யக்கூடிய தன்மையையும் கொண்டுள்ளது. அதாவது இயற்கையான முகத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு. அந்த வகையில் இஞ்சி முகத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்கும். இப்படி சிறந்த டோனராக செயல்படக்கூடிய இஞ்சியை தேங்காய் துருவுவது போல சிறிதளவு துருவி எடுத்துக்கொள்ளுங்கள். அந்த துருவலை முகத்தில் அப்படியே பூசி சிறிது நேரம் படுத்திருங்கள். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவி சுத்தம் செய்யுங்கள். இதனால் முகம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.


இஞ்சி பேஸ்ட்

ஒரு டீஸ்பூன் மஞ்சளுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சி பொடியை சேர்த்து இதனுடன் ரெண்டு டீஸ்பூன் தேன் கலந்து, கொஞ்சம் பன்னீரையும் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் நன்றாக தடவி ஈரம் இல்லாமல் நன்றாக காயவிடுங்கள். முகம் இருக ஆரம்பிக்கும் பொழுது முகத்தை குளிர்ந்த தண்ணீரைக்கொண்டு முகத்தை கழுவிக்கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுக்கு உங்கள் முகத்தில் ஒரு மாற்றம் தெரியும். சுருக்கங்கள் நீங்கி முகத்தின் இளமை அப்படியே இருக்கும்.

beauty tips in tamil


இஞ்சிச் சாறு

இளம் இஞ்சியை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாற்றை முகப்பரு மீது தடவுங்கள். இரண்டே நாட்களில் முகப்பரு மாயமாகிவிடும். முகப்பரு இருந்த தடயம் கூட இருக்காது. அந்த அளவிற்கு இஞ்சியில் ஏராளமான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இஞ்சியில் சுமார் 40 ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் இஞ்சி இரத்த ஓட்டத்தை தூண்டி, சருமத்திற்கு ஊட்டச்சத்து எளிதாக கடத்துவதற்கு துணை புரிகிறது. நீங்கள் எந்த ஒரு பேக் போடுவதற்கு முன்பும் இஞ்சி சாறை தடவி உலர விட்டு அதன் பின்னர் பேக் போட்டால் முகம் அந்த பேக்கை நன்றாக எடுத்துக்கொண்டு செயல்புரியத் தொடங்கும். இது இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை தூண்டி முகத்தை ஜொலிக்க வைக்கும் சிறந்த ஆற்றல் இஞ்சி சாறுக்கு உண்டு.

beauty tips in tamil


சரும துவாரம் நீங்க 

சிலருக்கு முக சருமத்தில் துவாரங்கள் பெரிது பெரிதாக தெரியும். இந்த முக துவாரங்களைக் கூட மெல்ல மெல்ல இருகச் செய்து இளமையை மீட்டு தரக்கூடிய அற்புதமான ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. எனவே தினமும் இஞ்சியை உணவில் மட்டும் அல்லாமல் நம்முடைய சரும ஆரோக்யத்திற்கும் பயன்படுத்தி வந்தால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். இஞ்சியுடன் தேன் சேர்த்து பேக்குகள் போடும் பொழுது இஞ்சியால் ஏற்படக்கூடிய எரிச்சலும் அடங்கும்.

Tags:    

Similar News