ஜொலிக்கும் அழகு வேணுமா..? அப்ப உங்களுக்கான டிப்ஸ்தான் இது..!

Beauty Tips In Tamil-அழகு என்பது முதலில் முகத்தில்தான் தொடங்குகிறது. உங்கள் முகம் பளபளக்க சூப்பர் டிப்ஸ் தரப்பட்டுள்ளது. செய்து பயன்படுத்துங்க.

Update: 2023-02-02 09:00 GMT

Beauty Tips In Tamil

Beauty Tips In Tamil

பொதுவாக எல்லோருமே முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது இயல்பு. ஒருவர் ஒருவரை பார்ப்பது முகத்தை மட்டுமே. அதிலும் குறிப்பாக பெண்கள் அழகு செய்வதில் வல்லவர்கள். தங்களை அழகாக்கிக்கொள்ள அவர்களது முயற்சி அளப்பெரியது. இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மிக விலை உயர்ந்த கிரீம்கள், ஃபேஸ் வாஷ் என்றெல்லாம் பயன்படுத்தி இந்த மூஞ்சி எதைப்போட்டாலும் பளபளப்பே ஆகமாட்டேங்குதே என்று நொந்து நூடுல்ஸ் ஆணவங்கதான் அதிகம்.

அதைபோன்றவர்களுக்கு இயற்கையான தயாரிப்புகள் பயன்படுத்தினால் செலவும் குறைவு, பலனும் கிடைக்கும்.

அதிலும் சில பெண்கள் அடிக்கடி வெயிலில் சென்று வேலை பார்க்க நேரிடும். அவர்களுக்கு முகம் கருத்து, எண்ணெய் வழிந்தது போல காணப்படும். அவர்களுக்கும் கீழே நாம் பார்க்கப்போகும் தயாரிப்பு நல்ல தீர்வைத் தரும்.

இயற்கையிலேயே கிடைக்கும் அதுவும் நம் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எளிமையாக முகத்தை பளபளக்க செய்வது எப்படி என்று பார்ப்போம் வாங்க. உங்கள் முகம் பளபளன்னு ஜொலிக்க இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அருமையான தயாரிப்பு ஒன்றை பார்ப்போம்.

குறிப்பு

ஒருவேளை இந்த தயாரிப்பை ஆண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் அதில் கஸ்தூரி மஞ்சள் சேர்க்காமல் பொடி தயார் செய்யலாம்.

மேலும் இந்தபொடியைப் பயன்படுத்தும்போது சோப்பு மற்றும் க்ரீம் வகைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் மட்டுமே இதன் பலன் முழுமையாகத் தெரியும்.

தேவையான பொருள்கள்

சந்தனப் பொடி – அரை டம்ளர்

கஸ்தூரி மஞ்சள் – 1 தேக்கரண்டி

கோரைக்கிழங்கு – 50 கிராம்

மகிழம்பூ பொடி– 50 கிராம்.

வெந்தயம் -25 கிராம்

உலர்ந்த பன்னீர் இதழ் – மூன்று டம்ளர்

பாசிப்பயறு – ஒரு டம்ளர்

( கோரைக்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மகிழம்பூ போடி போன்றவைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)

தயாரிப்பு முறை

முதலில் மேலே கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக நிழலில் உலர்த்தவேண்டும். நன்றாக போடி செய்யும் அளவில் உலர்ந்ததும் அதை மிக்ஸியில் அரைத்து பாட்டிலில் பாதுகாப்பாக சேமித்து வைத்து கொள்ளுங்கள்.

தினமும் குளிக்கும் போது இந்த பொடியுடன் எலுமிச்சை, கற்றாழை, பால், தயிர், தண்ணீர் இதில் ஏதாவது ஒன்றை சேர்த்து முகத்துக்கு பயன்படுத்தவேண்டும்.


இந்தப் பொடியை ஃபேஸ் பேக் போன்றும் பயன்படுத்தலாம்.

பனிக்காலம், கோடைக்காலம், மழைக்காலம் என எல்லாக் காலங்களிலும் இதை பயன்படுத்தலாம். மேலும்

சிறு பிள்ளைகள் முதல் ஆண், பெண் என அனைவரும் இந்தப் பொடியைப் பயன்படுத்தலாம். எந்த தீங்கினையும் ஏற்படுத்தாது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News