Bajra in tamil-கம்பு சாப்பிட்டா சும்மா தெம்பு கூடும்ல..! நீங்களும் சாப்பிடுங்க..!
சிறுதானிய வகைகளில் ஒன்றான கம்பு சிறந்த ஊட்டச்சத்துக்கள் உள்ள தானிய வகையாகும்.;
bajra in tamil-செழித்து வளர்ந்துள்ள கம்பு தானியம்.(கோப்பு படம்)
Bajra in tamil
சிறு தானியங்களில் அதிக சத்துமிக்கது, கம்பு. கம்பு நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அதிக அளவில் கொண்டுள்ள சிறுதானியம்.
செறிவான நன்மைகள் கொண்ட கம்பு உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி நன்மை அளிக்கிறது? அதன் ஊட்டச் சத்து விபரம் போன்றவைகளை இந்த கட்டுரையில் பார்ப்போம் வாங்க.. !
பஜ்ரா என்றால் கம்பு. கம்பு சிறு தானிய வகையில் ஒரு சிறந்த தானியமாகும். கம்பு அதிக அளவில் பயிரிடப்படும் ஒரு சிறு தானியமாகும். கம்பு புன்செய் நிலத்தில் விளையம் பயிர்வகையாகும்.
கம்பு பொதுவாக மானாவாரி பகுதிகளில் பாசனம் மற்றும் வறண்ட வானம்பார்த்த நிலப் பகுதிகளிலும் விளைவிக்கப்படுகிறது. மேலும் கம்பு அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடியது.
இந்தியாவில் கம்பு அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இந்த பயிர் வளரும் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும்.
Bajra in tamil
சிறுதானியங்களின் ராணி, கம்பு
கம்பு அதிகம் பயிரிடப்படும் சிறு தானிய வகையாகும். இது பொதுவாக ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றியதாக கருதப்படுகிறது. மேலும் கம்பு 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்பட்டு உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், கம்பு மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. உலகின் மொத்த சிறு தானிய உற்பத்தியில் கம்பு 55சதவீதம் ஆகும்.
பெரும்பாலான விளைச்சல் இந்தியாவில் விளைவிக்கப்படுகிறது. கம்பு மானாவாரி மற்றும் பாசனப் பயிர் நிலங்களிலும் விளைவிக்கப்படுகிறது. இதன் மகசூல் காலம் 3 முதல் 4 மாதங்கள். கம்பு அனைத்து வகையான மண்ணிலும் செழித்து வளரக்கூடிய பயிராக உள்ளது. மேலும் வறட்சியைத் தாங்கி வளரும் பயிராகவும் உள்ளது.
சிறுதானிய வகைகளில் சிறந்த ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதால் கம்பு சிறுதானியங்களின் ராணி என்று கருதப்படுகிறது.
Bajra in tamil
கம்பில் உள்ள ஊட்டச்சத்துகள்
11.8 சதவீதம் புரதம் கோதுமையில் காணப்படுகிறது. தானியங்களிலேயே கோதுமையில்தான் அதிகமாக புரதம் உள்ளது. கம்பில் பீட்டா-கரோட்டின் நிறைந்துள்ளது. இந்த பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ, ஆரோக்யமான தோல் மற்றும் கண்பார்வைக்கு முக்கியமான ஊட்டச்சத்தினை வழங்குகிறது.
100 கிராம் கம்பில்,
42 மி.கி கால்சியம் உள்ளது.
11 முதல் 12 மி.கி இரும்புச்சத்து உள்ளது.
வைட்டமின் பி11 0.38 மி.கி.
0.21 மி.கி ரிபோஃப்ளேவின் உள்ளது.
2.8 மி.கி நியாசின் உள்ளது.
மற்ற தானியங்களை விட 5 சதவீதம் அதிக எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவீதம் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது உடலுக்கு மிகவும் பயனுள்ள கொழுப்பு.
2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கம்பு
2000 ஆண்டுகளுக்கு முன் கம்பு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டதாக அகழ்வாராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கம்பு வறட்சியைத் தாங்கக்கூடியது. இது வெப்பமான காலநிலை மற்றும் குறைந்த ஊட்டச்சத்து மண்ணிலும் கூட வளரக்கூடியது.
Bajra in tamil
உடனடி கம்பு சோறு
இன்றைய பொருளாதாரச் சூழலில் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வேலைசெய்தால் பற்றாக்குறைதான் ஏற்படுகிறது. அதனால் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கம்பஞ்சோறு சமைப்பதற்கு ஆயத்த வேலைகள் அதிகம் தேவை. கம்பஞ்சோறு சமைக்காமல் இருப்பதற்கு அதற்கான முன்னேற்பாட்டு வேலைகள்தான். காரணம், கம்பு உணவைச் சமைக்க அதிக உழைப்பும் நேரமும் தேவைப்படுகிறது.
இந்தக் குறைபாடுகளைப் போக்க, கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கம்பஞ்சோறு எளிதாகத் தயாரிக்கும் உடனடி கம்பஞ்சோறு கலவையை உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளது. அதை வாங்கி கம்பஞ்சோற்றினை சமைக்கலாம், ருசிக்கலாம்.
அதிக சத்தான கம்பஞ்சோறு சமைத்து சாப்பிடுங்கள். ஆரோக்யமாக வாழுங்கள்.
Bajra in tamil
கம்பஞ்சோறும் கருவாட்டுக் குழம்பும்
இன்னும் பல கிராமங்களில் கம்பஞ்சோற்றுக்கு கருவாட்டுகுழம்பு வைத்து சாப்பிடும் வழக்கம் இருந்து வருகிறது. இது ஒரு தனித்துவமான சுவை கொண்டது. சுவையான பழைய கம்பஞ்சோற்றை கருவாட்டுக் குழம்பு சேர்த்து சாப்பிட்டால், ஆஹா..ஆஹா.. என்னே ருசி..என்னே ருசி.
கம்பின் மருத்துவ பயன்கள்
கம்பு உடல் சூட்டை குறைக்கிறது. வயிற்றுப் புண்கள் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. நம் மண்ணில் வளரும் உணவுகள் பொதுவாக நம் உடலால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படும் உணவுகள் ஆகும். நமது தட்பவெப்ப மண்டலத்தில் விளைந்த கம்பு நமக்கு வேறு எந்த உடல் உபாதையும் ஏற்படுத்தாத சிறந்த உணவு.
கம்பு பற்றிய விழிப்புணர்வு தற்போது பரவலாக ஏற்பட்டுள்ளது. அதனால், ஆங்காங்கு கம்பங்கூழ் விற்பனை நிலையங்கள் முக்கிய நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய ஊர்களிலும் முளைத்துவிட்டன.