Anna Kavithai in Tamil-அண்ணன் ஒரு தந்தையானவன்..!

அண்ணன் என்பவன் இளைய சகோதரர்களுக்கு இன்னொரு தந்தை. குறிப்பாக தங்கைகளுக்கு அண்ணன் அவர்க்ளின் உயிராக இருப்பான்.

Update: 2024-01-12 17:09 GMT

anna kavithai in tamil-அண்ணன் கவிதை (கோப்பு படம்)

Anna Kavithai in Tamil

பாசம் என்ற சொல்லுக்கு ஈடு இணை வேறு எதுவுமே இல்லை. பாசத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. ஒருவரை அடித்து திருத்துவதைவிட பாசமாக பேசினாலே போதும், திருந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் தங்களது பாசத்தை வெளிப்படுத்துவார்கள் சிலர் பாசமாக பேசுவார்கள்.சிலர் தங்களுடைய பாசத்தை வெளிப்படுத்த அன்பளிப்பாக ஏதாவது கொடுப்பார்கள்.

Anna Kavithai in Tamil

முக்கியமாக பெற்றோர்கள் குழந்தைகளிடம் கட்டாயமாக பாசத்துடன் இருக்க வேண்டும். நம் முன்னோர்கள் காலத்தில் எல்லோரும் கூட்டுக்குடும்பமாக இருந்ததால் ஒருவருக்கொருவர் பாசத்தைக் காட்டி வாழ்க்கையை சந்தோஷமாக கழித்தார்கள். அதனால் குழந்தைகளுக்கும் அனைவரின் பாசமும் கிடைத்தது. அந்த பாசம் கிடைத்துவிட்டால் பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்கு பாசம் கடத்தப்படுகிறது.

அதன்மூலமாகவே சகோதர பாசம் விளைகிறது. அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்கிற உடன் பிறப்பு உறவுகள் காலத்திற்கும் நின்று பேசும். ஒரு அண்ணன் குடும்பத்திற்கு எப்படி இருப்பான் என்பதை உணர்த்தும் கவிதைகள்.

Anna Kavithai in Tamil

அம்மாவின் அன்பையும்

அப்பாவின் பாதுகாப்பையும்

ஒரே இடத்தில் பெற

முடியுமானால் அது

அண்ணனிடம் மட்டுமே..!

அண்ணனுடன் பிறந்த

தங்கைகளுக்கு

மட்டும் தான் தெரியும்

அண்ணனுக்கு இன்னொரு

பெயர் “அப்பா” என்று..!

அண்ணனை பெற்ற

தம்பி தங்கைகளுக்கு

மட்டுமே தெரியும்..

தனக்கு ஒரு பிரச்சனை

என்ற பொழுதே தன் மீதான

அவன் அன்பு

வெளிப்படுத்தப்படும் என்று..!

பெண்களின் மனம் ஆழமாம்..

அண்ணனின் மனதை

அளந்து பார்க்காதவர்கள்

சொல்லிக் கொள்ளுகிறார்கள்..!

Anna Kavithai in Tamil

அண்ணன் என்பவன் கடவுளால்

கொடுக்கப்பட்ட

அற்புதமான வரம்..

அந்த வரத்தை பெற்றவர்களுக்கு

அப்பாசத்தின் விலைமதிப்பு

தெரியாது.. அந்த வரம்

கிடைக்காமல் அந்த

பாசத்திற்காக ஏங்குபர்களுக்கு

மட்டும் தான் தெரியும்

அப்பாசத்திற்கு விலை மதிப்பே

இல்லை என்று..!

Anna Kavithai in Tamil

எப்போது சண்டை போட்டாலும்

என் பொய்யான அழுகையில்

அனைத்தையும் விட்டுத் தரும்

நல்ல உறவு என் அண்ணன்..!

நதி போல ஓடிக் கொண்டே

இருந்தால் மட்டுமே வாழ்க்கை

போரை வென்றிட இயலும்

என்று செயலில் காட்டியவன்

என் அண்ணன்..!

என் வாழ்வினை உன் கனவென

நெஞ்சில் சுமந்தவன் நீயடா..

என் அண்ணா..!

போகின்ற வழி எங்கிலும்

உடன் நின்று நிழலென

தொடர்பவன் நீயடா..!

Anna Kavithai in Tamil

தோழமையோடு

தோழ் கொடுத்தான்

நான் துவண்டெழும் பொழுது…

வல்லமையோடு வலிமை

கொடுத்தான் நான் வீழ்ந்தெழும்

பொழுது… பரிவோடு பாசம்

கொடுத்தான் தனிமையில்

நான் தவிக்கும் பொழுது..

அன்போடு அரவனைத்தான்

என் மனம் உருகும் பொழுது..

நண்பனாக நன்னெறிகள் தந்தான்

நான் பாதை தவறிய பொழுது..

தந்தையாக அறிவுரை தந்தான்

தவறுகளை நான் செய்த பொழுது..

அன்னையாக ஆறுதல் தந்தான்

கண்ணீரில் நான் கலங்கிய பொழுது..

சண்டைகள் பல வந்தாலும்

அன்பின் ஆழம் குறைவதில்லை..

பந்தங்கள் பல இருந்தாலும்

என் அண்ணன் தான் என்றுமே

எனக்கு முதல் பந்தம்..!

எத்தனை பிறவிகள்

இருந்தாலும் நீயே எனக்கு

அண்ணனாக வர வரம்

தருவாயா..?

தங்கை கண்ணில்

கண்ணீர் வந்தால்

அண்ணன் நெஞ்சில்

ரத்தம் வருவது போன்ற

வலி இருக்கும்..!

Anna Kavithai in Tamil

தங்கை தன் அண்ணனை

யாருக்காகவும் விட்டு

கொடுக்க மாட்டாள்..!

தங்கைக்கு வாழ்க்கை

அமையும் வரை தன்

வாழ்க்கையை பற்றி

நினைக்க மாட்டான்

அண்ணன்..!

தங்கை உள்ளவனுக்கு

தங்க தங்கமாளிகை

தேவையில்லை..

தங்கை உள்ளமே

தங்கமாளிகை தான்..!

வலிக்காமல் குட்டுவது

எப்படி என்பது தங்கைகளுக்கு

மட்டுமே தெரியும்.. அது போல

வலித்தது போல் நடிக்க

அண்ணன்களால்

மட்டுமே முடியும்..!

Anna Kavithai in Tamil

கையில் மருதாணி வைத்து

அவசரமாய் என்னிடம்

ஓடி வரும் போது ஓர்

உலக அதிசயமாய்

என் தங்கை..!

தங்கையின் வாழ்க்கைக்காக

தன் வாழ்க்கையை கூட

தியாகம் செய்பவன்

அண்ணன் மட்டும் தான்..!

விடுமுறை தினங்களில்

சைக்கிள் ஓட்ட

கற்றுத்தருவாய் முயற்சித்து

மணலில் நான் விழுகையில்

மாரோடு அணைக்கும்

தாயும் நீயே அண்ணா..!

அண்ணன் தங்கை

எவ்வளவு தான் சண்டை

போட்டாலும் அடுத்த

நொடியே இருவரும்

பேசிக் கொள்வார்கள்..

அது தான் உடன்

பிறந்த பாசம்..!

Tags:    

Similar News