Amma Feeling Quotes in Tamil-அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..!
Amma Feeling Quotes in Tamil-அம்மா என்பவள் குழந்தைகளுக்கு இந்த உலகத்தை அடையாளப்படுத்தியவள். உறவுகளின் உன்னதம் தாய். அன்பிற்கு அடையாளமும் அவளே.
Amma Feeling Quotes in Tamil-அம்மா என்ற ஒரு மந்திரச் சொல் இந்த உலகையே கட்டிப்போடும் மாயசக்தி படைத்த உறவு. உயிரங்கள் அத்தனைக்கும் தாய் என்பவள் உண்டு. அந்த தாய்க்கு ஈடாக வேறு எவரும் குழந்தையை கவனித்துவிட்டு முடியாது. குழந்தைகள் விடும் மூச்சிலேயே உடல்நிலையை கணித்துவிடும் மருத்துவர் தாய். பள்ளிக்கு போகாமலேயே வாழ்க்கையின் பாடங்கள் கற்றுத்தரும் ஆசிரியை. அவள் இல்லாத உலகம் பிள்ளைகளுக்கு சூன்யமே.
- அம்மா என் நினைவுகளில் நீ என்றென்றும் குடிகொண்டிருக்கிறாய்..எப்போதும் உன்னை நினைவில் கொள்கிறேன். உன்னைப்போன்ற ஒரு தெய்வம் புவியில் யாரும் இல்லை..!
- தாயே நான் உன்னை பேசுகிறேன்..நீ வானில் இருந்து கேட்டுக்கொண்டிருப்பாய்..என் வார்த்தைகளை நீ செவிமடுப்பாய் என்று.. எனக்குத் தெரியும். உன் அன்பை விட நான் அதிகம் மதிக்கக்கூடிய எதுவும் இல்லை அம்மா..!
- நான் எங்கே இருந்தாலும் எப்படி இருந்தாலும் உன் நினைவுகள் மட்டும் மாறுவதில்லை தாயே..உன் புன்னகை ஒன்றே என்னை வாழவைத்துக்கொண்டிருக்கிறது..உன் இழப்பை மறக்கமுடியாத மகனாக என் இதயத்தில் உன்னை சுமந்து திரிகிறேன் அம்மா...!
- நீ இல்லாமல் என் வாழ்க்கை கடினம் அம்மா..! நீ இல்லாத வாழ்க்கை வாழ்க்கையாக நான் அறியேன்..உன் பாசத்தின் மிச்சம் இன்னும் என் நினைவுகளில் இருப்பதால் நானும் உயிர் வாழ்கிறேன்..!
- உன் உடல் மட்டுமே இங்கு இல்லை அம்மா... மற்றபடி வீட்டுக்குள் நீ இன்னும் உலாவிக்கொண்டுதான் இருக்கிறாய்..சமையலறையில் நீ சமைத்த தடயங்கள்..உன் பேச்சொலி என் காதுகளில் விழுகிறது..! சாப்பிட வாடா..என்று கொஞ்சலாய் நீ அழைக்கும் குரலில் இன்னும் ஈரம் போகவில்லை அம்மா..நீ அழைப்பதாய் எண்ணியே சாப்பாட்டில் அமர்கிறேன்..!
- வீடு என்பது செங்கல்லும் சிமிண்டும் தான் என்று எண்ணுகிறார்கள் அம்மா..! எனக்கு வீடு என்றால் நீதானம்மா..! வீட்டுக்கு போகிறேன் என்றால் என் தாயைப் பார்க்கப் போகிறேன் என்பதே பொருள்..! நீ இல்லாத வீடு எனக்கில்லை அம்மா..!
- மரணம் என்னவோ என் தாயை சொர்க்கம் கொடுசென்றது..ஆனால் என்னை மட்டும் நரகத்தில் .தள்ளி.. நீ இல்லாத வாழ்க்கை எனக்கு எப்படியம்மா சொர்க்கமாகும்..? நீ இல்லாத வீட்டை வெறுமையாக உணர்கிறேன்..!
- எல்லாமே நீயாகவே இருந்துவிட்டாய் அம்மா..இன்று நீயில்லாமல் என் வாழ்க்கையின் இயக்கங்கள் எல்லாம் முடங்கிப் போய்விட்டன..இயல்பு நிலைக்குத் திரும்ப எத்தனை நாட்கள் ஆகுமோ நானறியேன்..! நீ என்னுடன் வாழ்ந்த நாட்களின் நினைவுகளே என்னை மீட்டெடுக்கும் அம்மா..!
- எத்தனை வயாதாலும் அம்மாவுக்கு பிள்ளை பிள்ளைதான்..! எனக்கு ஐம்பது வயதென்றால், தாயே நான் என்ன பெரியவன் ஆகிடமுடியாது..! என்றும் நீ எனக்கு அம்மாதான் தாயே..!
- அம்மா நீ எனக்கு எத்தனையோ படிப்பினை தந்தாய்..! நீ எனக்கு ஒரு பேராசான்..! அன்பு, கருணை, இரக்கம், கண்டிப்பு, கோபம்,மகிழ்ச்சி, நிர்வாகம், பிறரிடம் பழகும்விதம் என எத்தனை மேதாவியாய் எண்ணற்ற படிப்பினை தந்தாய்..உன் வழிகாட்டலே என்னை இன்றும் வழிகாட்டுகிறது..!
- அம்மா, உன் மீதான நம்பிக்கை எனக்குள் நீ இருப்பதாக உணர்கிறேன்.. இருளில் நடக்கும்போதுகூட அங்கு ஒரு ஒளி நீயாக தெரிகிறாய்..என்றென்றும் நல்ல நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கும். நான் எப்போதும் உன்னை நினைவில் கொள்வேன்.
- எல்லாமாக இருந்து வழிகாட்டினாய் அம்மா..என் உலகம் உன்னிடம் இருந்தே தொடங்கியது..நீ போனபின் எல்லாமே முடிந்ததுபோல ஆகிவிட்டதே அம்மா.. நீ இல்லாத வாழ்க்கை சிதறிக்கிடக்கிறது. மிஸ் யூ அம்மா.
- என் செல்ல அம்மாவே எல்லாம் எனக்குக் கற்றுத் தந்தாய்..! ஆனால் நீயில்லாத வாழ்வது என்பதை கற்றுத் தராமல் விட்டு விட்டாயே..! இன்று நீ இல்லாமல் என் இதயம் அலுத்து தவிக்கிறது..நீ இல்லாத உலகை நினைக்க மறுக்கிறது..! என்ன செய்வேன் தாயே..?!
- நீ என்னை விட்டு விலகாத எண்ணங்களில் இருந்தபோது எப்படி அம்மா என்னை ஏமாற்றிப்போனாய்..? என் வாழ்வின் சூரியனே நீதானே அம்மா..நீ போனபின் என் வாழ்க்கையில் விடிவு என்பது எப்படி கிடைக்கும் தாயே..?
- நீ இல்லாத ஒரு நாளை கற்பனை செய்துகூட நான் பார்த்ததில்லை..அம்மா..பின் எப்படித் தாயே.. நீ இல்லாமல் வாழ நான் கற்றுக்கொள்வேன்..? ஆனால், நீ இல்லாத வாழ்வை எண்ணி நான் பயப்படுகிறேன். மிஸ் யூ அம்மா.
- amma missing kavithai in tamil
- அடுத்த பிறவியிலும் நான் உன் மகனாக இருக்க வேண்டும் என்று நான் தாயே..! ஏனெனில் நீ என் மகளாக பிறக்கவேண்டும் தாயே..! உன்னை சீராட்டி நான் வளர்க்கவேண்டும் பூ போலவே..!
- காலம் முழுவதும் என்னை சுமப்பவள் நீதான் அம்மா..! பிறப்பில் என்னை வயிற்றிலும் மடியிலும் தோளிலும் சுமந்தாய்..வளர்ந்தபின் என்னை மனதில் சுமக்கிறாய்..எப்போது வருவேன்? எப்போது உண்பேன் என்பதிலேயே உன் மனம் என்னைச் சுற்றுகிறது...!
- ஆயிரம் விடுமுறை வந்தாலும் என் அம்மாவின் சமையல் அலுவலகத்துக்கு மட்டும் விடுமுறை இல்லை. அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறையில்லை.. ஆனால்..இப்போது ஏனம்மா நிரந்தர விடுமுறை விட்டாய்..? நீ சமையலறைக்குள் இங்கும் அங்கும் சிறுபிள்ளைபோல ஓடித்திருந்த நினைவுகள் என்னை வாட்டுகிறதே அம்மா..!
- நான் உன்னுடன் இருக்கும் போது ஏனோ என் பிரச்னைகள் எனக்கு பெரிதாக தோன்றியதில்லை..நீ இருக்கிறாய் என்கிற நம்பிக்கை..! நீயே என் நம்பிக்கை..நீயே என் உலகம்..நீ இல்லாத ஒரு உலகம் எனக்கு நரகமாய் தோன்றுதே அம்மா..!
- எதுவும் அறியாத வயதில் என் சுமைகளுக்கு கால்கள் இல்லை..எல்லாமே நீ சுமந்தாய்..அம்மா..! உன் மடி மீது தலை சுமைகளும் கவலைகளுமின்றி அன்னையின் கரங்களில் தவழும் காலம் சொர்க்கமே
- உயிருக்குள் அடைக்காத்து உதிரத்தை பாலாக்கி, பாசத்தில் தாலாட்டி பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து நமக்காகவே வாழும் அன்பு தெய்வம் அன்னை..!
- கடல் நீரை கடன் வாங்கி கண்கொண்டு அழுதாலும் நான் சொல்லும் நன்றிக்கு ஈடு ஆகாதம்மா. நீ எனக்காக பட்ட துன்பங்கள்..!
- ஒவ்வொரு நாளும் கவலைப்படுவாள்,என்னைப்பற்றி மட்டுமே.. கவலை இல்லை..! அதை பெரிதாக எடுத்துக்கொள்வதும் இல்லை..எனக்கென்ட்ரீ வாழும் தெய்வம் உண்டென்றால் அவளே என் அம்மா..!
- எந்த பஞ்சு மெத்தையில் படுத்திட்டாலும் வராத தூக்கம் என் தாய்மடி தரும் ஆழ்ந்த உறக்கம்..! அதிலும் தாயவள் பாடும் தாலாட்டு இன்னும் அவள் மடி தேடி ஓடுகிறது..!
- வித வித உணவுகள் 5 நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்டுவிட்டேன்..! ஆனால் ஆயிரம் உணவுகள் வித விதமாக சாப்பிட்டாலும் என் அம்மா கை சமைத்த உணவுக்கு ஈடில்லை உலகிலே..! அதை நிமேல் என்று தானம்மா நான் உண்பது?
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2