6 month baby food chart in tamil-6 மாத குழந்தைக்கு முட்டை கொடுக்கலாமா..? என்ன உணவு தரலாம்..? தெரிஞ்சுக்கங்க..!

6 month baby food chart in tamil-குழந்தைக்கு உணவூட்டல் என்பது மட்டுமே தாயின் வேலையல்ல. ஊட்டச்சத்துள்ள உணவை குழந்தை விரும்பும் வகையில் கொடுப்பதும் அவசியம்.;

Update: 2023-04-27 07:56 GMT

6 month baby food chart in tamil-ஆறு மாத குழந்தைக்கான உணவு (கோப்பு படம்)

6 மாத குழந்தைக்கு என்ன வகையான உணவுகளைக் கொடுக்கலாம் என்று பலரும் மண்டையைப்போட்டு குழப்பிக்கொள்ளவேண்டாம். இதோ இந்த கற்றுறையில் 6 மாதமான குழந்தைக்கான உணவு பட்டியல் தரப்பட்டுள்ளது.


இன்றைய அவசர உலகில் பல இளம் பெற்றோருக்கு குழந்தையை எப்படி பராமரிப்பது என்பது தெரியாமலேயே உள்ளனர். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலத்தில் பெரியவர்கள் குழந்தைகளை வளர்க்க வழிகாட்டிகளாக இருந்தனர். ஆனால், இன்று திருமணம் முடிகிறதோ இல்லையோ தனிக்குடித்தனப் பேச்சு முந்திக்கொண்டு முன்னாள் நின்றுவிடுகிறது. இப்படி தனிக்குடும்பமாக வாழ்வதால் பலருக்கு குழந்தை வளர்ப்பு பற்றிய அனுபவம் இல்லாமல் போய்விடுகிறது.

6 month baby food chart in tamil

சவாலான பணி

அதுமட்டுமில்லாமல் குழந்தைகளை பராமரிப்பது என்பது இப்போது ஒரு சவாலான பணியாகிவிட்டது. குழந்தை பராமரிப்பு என்பது எளிதான செயல் இல்லை. குழந்தைக்குத் தேவையானவைகளை அவர்கள் விரும்பும் வகையில் ஊட்டச்சத்து மிக்கதாகவும் கொடுக்க வேண்டும். மேலும் மிகவும் கவனமுடனும் உணவினை கொடுக்கவேண்டும்.

நம் நாட்டு மருத்துவத்துறை வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்பில் குழந்தை பிறந்து 6 மாதம் வரை தாய்ப்பால் தவிர எந்த ஒரு உணவையும் கொடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆறு மாதம் முடிந்த குழந்தைக்கு புதிய உணவுகளை அறிமுகப்படுத்த பெற்றோர் மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள். ஆனால் அனைத்து உணவுகளையும் குழந்தைக்கு கொடுத்துவிட முடியாது. குழந்தைக்கு புதிய உணவுகளை கொடுக்கும் போது என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும்.எதைக் கொடுக்கக் கூடாது என்பதை தெரிந்துகொள்வது அவசியம். .

இந்த கட்டுரையில் சில உணவுகள் கொடுக்கப்பட்டு உள்ளது அதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

6 month baby food chart in tamil

சர்க்கரைவள்ளி கிழங்கு

சுத்தமாக கழுவிய சர்க்கரைவள்ளி கிழங்கை நன்கு வேகவைத்து தோல் நீக்கி மசித்துக் குழந்தைக்கு கொடுக்கலாம். ஆரோக்யமான முறையில் குழந்தையின் எடை அதிகரிப்பதற்கு இது பெரிதும். உதவும்.சருமம் மற்றும் தலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது.


தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் பார்லி, ஓட்ஸ், பாசிப்பயிறு போன்றவற்றை கட்டாயம் சேர்க்கலாம். இதில் புரதச்சத்துக்கள், தாதுக்கள், ஊட்டச் சத்துகள் போன்றவை நிறைந்துள்ளன.

ஒவ்வொரு பருப்பையும் அரை டீஸ்பூன் அளவு சேர்த்து அரிசி சாதத்துடன் கலந்து கூழ்மமாக கஞ்சி போல குழந்தைக்கு கொடுக்க வேண்டும். இதையும் சிறிது சிறிதாக அளவைக் கூட்டவேண்டும். குழந்தை விரும்பி சாப்பிட்டால் மட்டுமே கொடுக்கவேண்டும். குழந்தைக்கு பிடிக்கவில்லை என்றால் சிறிது நாட்கள் இடைவெளி விட்டு பின்னர் கொடுக்கலாம்.

தண்ணீர்

பிறந்த குழந்தைக்கு மூன்று மாதங்களுக்கு பிறகு தான் தண்ணீர் கொடுக்கவேண்டும். அதுவரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. தாய்ப்பாலில் குழந்தையின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.

ஆறு மாதங்கள் கழிந்துவிட்டால் குழந்தைக்கு நிறைய தண்ணீர் கொடுக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் அதுவரை குழந்தைக்குத் தேவையான அளவு தாய்ப்பால் சுரப்பு இருக்க வேண்டும், இல்லையெனில் குழந்தையின் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படலாம்.

குழந்தைக்கு ஆறு மாதம் ஆகும் போது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கால் அல்லது அரை டம்ளர் அளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு படிப்படியாக குழந்தையின் வயது, எடை மற்றும் உயரத்திற்கு ஏற்ப தண்ணீர் மற்றும் உணவின் அளவை அதிகரிக்க வேண்டும்.

6 month baby food chart in tamil


பசும் பால்

குழந்தை பிறந்த முதல் நாள் தொடங்கி தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பது அவசியம். குழந்தைக்கு 1 வயதாகும்போது மட்டுமே பசும்பால் கொடுக்கவேண்டும். ஏனெனில் ஒரு வயது குழந்தைக்கு மட்டுமே பசும் பாலில் உள்ள புரோட்டீன் மற்றும் நொதிப் பொருட்கள் செரிமானம் ஆகும். அதில் உள்ள கனிமச் சத்துகள் குழந்தைகளுக்கு சில நேரங்களில் பாதிப்பை உண்டாக்கலாம்.

வேர்க்கடலை

வேர்கடலை ஆரோக்யமான மற்றும் புரோட்டீன் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்த உணவுப் பொருள், ஆனால் வேர்க்கடலை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும்.எனவே, வேர்கடலையை குழந்தைக்கு கொடுக்க நினைத்தால் ஒரு வயதிற்கு மேல் இருக்கும் குழந்தைக்கு மட்டும் கொடுக்க வேண்டும். அதுவும் சிறிய அளவில் தொடங்கி மெல்ல மெல்ல அளவை அதிகரிக்கவேண்டும்.

கடல் உணவுகள்

கடல் உணவுகளில் குறிப்பாக இறால் நண்டு போன்றவை குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். கடல் உணவுகளை கொடுக்க நினைத்தால் மீன் கொடுக்கலாம். சில மீன்களான டூனா மற்றும் கானாங்கெளுத்தி போன்றவற்றில் மெர்குரி அதிகம் உள்ளது. மெர்குரி அதிகம் உள்ள எந்த உணவுகளையும் கட்டாயம் குழந்தைகளுக்கு மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கக் கூடாது.

மெர்குரி இல்லாத மீன்களைக்கொடுக்கலாம். மேலும் கடல் உணவுகளைக் குழந்தைக்கு கொடுப்பதாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று நீங்கள் கொடுக்கலாம். பொதுவாகவே எந்த உணவையும் குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனை பெற்று கொடுப்பது பாதுகாப்பானதாகும்.

6 month baby food chart in tamil

கைக்குத்தல் அரிசி

கைக்குத்தல் அரிசியை குறைந்தது 8 மணிநேரம் நல்ல நீரில் ஊற வைத்து பின் நன்றாக வேகவைத்து பிசைந்து குழந்தைக்குக் கொடுக்கலாம், நுண்ணூட்டச் சத்துக்கள் அனைத்தும் இதில் நிறைந்துள்ளன. அலர்ஜியும் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

வாழைப்பழம்

பொட்டாசியம், நார்ச்சத்து, நிறைந்த உணவு, வாழைப்பழம். இது ஒரு இயற்கையான ஊட்டச்சத்து மிக்க உணவு. மேலும் குழந்தைகளுக்கு எந்த பின்விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. குழந்தைகளுக்கு சிறந்த உணவுகளில் வாழைப்பழம் எப்போதும் முதன்மையான உணவாக இருக்கிறது, குழந்தைகளுக்கு செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை நீக்குகிறது.


ஆரஞ்சு பழம்

குழந்தைகளுக்கு கட்டாயம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை. அதற்கு வைட்டமின் 'சி' அவசியம். ஆரஞ்சு மற்றும் கொய்யாப்பழம் போன்றவற்றில் வைட்டமின் 'சி' மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. எனவே ஆரஞ்சு மற்றும் கொய்யாப்பழம் போன்றவைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.

நாட்டுக்கோழி முட்டை

நாட்டுக் கோழி முட்டையில் பல்வேறுவகையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் இதை எடுத்துக்கொள்ளலாம்.இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், போன்றவை எளிதில் கிடைப்பதால் அனைத்து நோய்களும் இதனால் குணமாகும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் பலமடங்கு அதிகரிக்கும். குழந்தைகளுக்கு வேகவைத்து தரலாம்.

6 month baby food chart in tamil

கோதுமை

குழந்தைகளுக்கு 7 முதல் 8 மாதம் முழுமையாக நிறைவடைந்த பின் கோதுமை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அப்படி கொடுத்தாலும் நன்கு கூழாக்கி கொடுக்க வேண்டும். அதற்கு முன் குழந்தைகளுக்கு கோதுமை உணவு அலர்ஜி ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை கட்டாயம் சோதித்துப் பார்த்து பின்னர் தொடங்கலாம்.


அவகோடா பழம்

அவகோடா பழத்தை நறுக்கி ஸ்பூனால் அதன் சதைப் பகுதியை எடுத்து மசித்து பால் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதில் ஆரோக்யமான கொழுப்பு இருப்பதால் உடல் எடை அதிகரிக்கவும், சருமப் பாதுகாப்புக்கும் இது சிறந்தது.

மாம்பழம்

குழந்தைகளுக்கு சுமார் 7 மாதம் அல்லது 8 மாதம் முடிந்தபின்னர் குழந்தைக்கு மாம்பழத்தின் சதைப்பகுதியை கூழ்மமாக்கி கொடுக்கலாம் இதனால் குழந்தையின் சருமம், முடி, கண்கள் ஆகிய உறுப்புகளுக்கு சிறந்ததாகும்.


பச்சை பட்டாணி

8 மாத குழந்தை உணவு பட்டியலில் குழந்தைகளுக்கு அதிக அளவு இந்த பச்சை பட்டாணியை வேகவைத்து மசித்து வாரம் இருமுறை கொடுக்கலாம். குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். மேலும் குழந்தைகள் சுறுசுறுப்பாகவும் எலும்புகள் வலுப்பெற்று ஆரோக்யமாகவும் இருப்பார்கள்.

பச்சை பட்டாணியில் புரதம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்புச் சத்து, வைட்டமின் B6, மக்னீசியம் ஆகியன உள்ளன.

Tags:    

Similar News