3 month baby food in tamil-3 மாத குழந்தைக்கு இணை உணவு கொடுக்கலாமா..? தெரிஞ்சுக்கங்க..!
3 month baby food in tamil-ஒவ்வொரு நாளும் குழந்தையின் வளர்ச்சி நிலை மற்றும் உண்ணும் உணவில் மாற்றங்கள் தெரியும். அதற்கேற்ப உணவு கொடுப்பது அவசியம்.;
3 month baby food in tamil-மூன்று மாத குழந்தைக்கான உணவு (கோப்பு படம்)
] பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அத்தியாவசியமானது. தாய்ப்பால் சுரக்காத அம்மாக்கள் குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்படும் பால் கொடுக்கலாம். ஆனால் குழந்தைகள் வளர வளர தாய்ப்பால் மட்டுமே போதாது. குழந்தைகள் வேகமாக வளர்வார்கள். அதனால் நாளுக்குநாள் அவர்களின் உணவில் மாற்றம் தெரியும். எனவே, குழந்தைகளுக்கு எப்போது திட உணவு மற்றும் திரவ உணவுகளைக் கொடுக்க வேண்டும் என்பது பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம் வாங்க.
நாம் 3 மாத குழந்தைக்கான உணவு பற்றித்தான் பார்க்கிறோம். ஆனால், 3 மாதத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு எதையும் கொடுக்க முடியாது. அதனால் இந்த கட்டுரையில் முக்கியமாக ஒரு மாதம் தொடங்கி ஒரு வருட குழந்தைகளுக்கான உணவு முறைகளை பார்க்கலாம்.
ஆலோசனை :
குழந்தைக்கு எந்த ஒரு புதிய உணவைக் கொடுப்பதற்கு முன்னும், குழந்தைகள் நல மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையுடன் கொடுப்பது பாதுகாப்பு மிக்கது.
முதல் மாதம்
முதல் மாதம் குழந்தைக்கு தாய்ப்பால் தான் முதல் மற்றும் முழுமையான உணவாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை எந்த ஒரு திட உணவையும் கொடுக்கக்கூடாது. முக்கியமாக முதல் மாதத்தில் குழந்தைக்கு 2 மணிநேரத்திற்கு ஒருமுறை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
இரண்டாம் மாதம்
குழந்தை பிறந்த இரண்டாவது மாதத்தில் முதல் மாதம் போலவே தாய்ப்பால் கொடுக்கவேண்டும். ஒரு நாளைக்கு 7முதல் 8 முறை தாய்ப்பால் கொடுப்பது அவசியம் ஆகும்.
மூன்றாம் மாதம்
குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்திலும் தாய்ப்பால் மட்டுமே போதுமானது. இந்த மாதத்தில் 4 மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.
நான்காம் மாதம்
குழந்தை பிறந்து 4 மாதம் ஆகிவிட்டால் குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனையுடன் பழச்சாறுகளைக் கொடுக்கத் தொடங்கலாம். அதிலும் ஆரஞ்சு ஜூஸ் கொடுப்பது குழந்தைக்கு ஆரோக்யமானதாகும். குழந்தைக்கு ஜூஸ் அறிமுகப்படுத்துவதற்கு ஏதாவது ஒரு ஜுஸைத் தான் தேர்வு செய்து கொடுக்கவேண்டும். முக்கியமாக அது வீட்டில் தயாரித்ததாக இருக்க வேண்டியது அவசியம்.
ஐந்தாம் மாதம் :
ஐந்தாவது மாதத்தில் குழந்தைகள் நல மருத்துவரைச் சந்தித்து, குழந்தைக்கு மெதுவாக திட உணவுகள் கொடுப்பது குறித்து ஆலோசனை பெறலாம். மருத்துவர் திட உணவு கொடுப்பதற்கு பரிந்துரைத்தால் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை கூழ்மமாக்கி, தேவைப்படின் அதனுடன் சிறிது தாய்ப்பால் சேர்த்து குழந்தைக்கு சிறிது கொடுக்கலாம். பழங்களை நன்றாக மசித்துக் கொடுப்பது அவசியம்.
ஆறாம் மாதம் :
6 மாதம் ஆன உங்கள் குழந்தை ஒருசில உணவுகளை உட்கொள்ள மறுத்தால், அந்த உணவுகளை மீண்டும் குழந்தைக்கு கொடுக்காதீர்கள். அவர்கள் விரும்பி உண்ணவேண்டும். இந்த மாதத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலுடன், திட உணவுகளை சேர்த்து கொடுக்கலாம்.
ஏழாம் மாதம் :
குழந்தை பிறந்து ஏழு மாதம் ஆகிவிட்டதால் அவர்களுக்கு நன்கு மசித்த சாதம், தயிர், மசித்த ஆப்பிள் அல்லது வாழைப்பழம், வேக வைத்து மசித்த காய்கறிகள் போன்றவற்றையும் இணையாக கொடுக்கலாம். குழந்தைக்கு எது கொடுப்பதாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனை மிகவும் முக்கியம் என்பதை மறவாதீர்கள்.
எட்டு மற்றும் ஒன்பது மாதம்
குழந்தை பிறந்து 8 மற்றும் 9 மாதம் ஆகியிருந்தால், குழந்தைக்கு இதுவரை கொடுத்து வந்த உணவின் அளவை விட, சற்று கூடுதலாக உணவைக் கொடுக்கலாம். ஆனால், கடைகளில் விற்கப்படும் குறிப்பாக சாக்லேட், ஜூஸ், சிப்ஸ், கேக் போன்ற உணவுகள் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பத்து முதல் 1 வயது வரை
10 மாதம் முதல் 1 வயது வரையிலான குழந்தைகளுக்கு வேக வைத்த காய்கறிகள், சாதம், பால், தயிர், பழங்கள் போன்ற அனைத்தையுமே கொடுக்கலாம். அவர்கள் நாம் சாப்பிடும் உணவுகளைக்கூட சாப்பிட ஆர்வப்படுவார்கள். காரம் மற்றும் உப்பு அதிகம் சேர்க்காமல் நாம் சாப்பிடும் உணவைக் கொடுக்கலாம்.