தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய நுகர்வோர் மற்றும் குறைதீர்ப்பு ஆணையத்தில் காலியாக உள்ள 2 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.;

Update: 2023-10-16 13:33 GMT
தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
  • whatsapp icon

தேசிய நுகர்வோர் மற்றும் குறைதீர்ப்பு ஆணையத்தில் காலியாக உள்ள 2 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு மேல்முறையீடுகளை விசாரிப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் கீழ் நிறுவப்பட்ட மேல்முறையீட்டு ஆணையமான தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் உறுப்பினர் பதவிக்குத் தற்போதுள்ள இரண்டு காலியிடங்களை நிரப்ப நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் நலத் துறை விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இந்த ஆணையத்தின் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது. நுகர்வோர் நலத் துறை இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

நியமனத்திற்கான தகுதிகள், சம்பளம் மற்றும் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தீர்ப்பாய சீர்திருத்த சட்டம் மற்றும் தீர்ப்பாய (சேவை நிபந்தனைகள்) விதிகள், 2021 ஆகியவற்றின் விதிகளால் மேற்கொள்ளப்படும்.

தீர்ப்பாயங்களின் சீர்திருத்தச் சட்டம், 2021, தீர்ப்பாயங்கள் (சேவை நிபந்தனைகள்) விதிகள், 2021, நுகர்வோர் பாதுகாப்பு (நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையங்கள்) விதிகள் ஆகியவை அமைச்சகத்தின் இணையதளமான www.consumeraffairs.nic.in –ல் இடம்பெற்றுள்ளது.

தகுதியான மற்றும் விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் URL: jagograhakjago.gov.in/ncdrc மூலம் 2023 நவம்பர் 29 –க்குள் வரவேற்கப்படுகின்றன. இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நகலை உரிய ஆவணங்களுடன் நுகர்வோர் நலத்துறை, அறை எண் 466-ஏ, கிரிஷி பவன், புதுதில்லி என்ற முகவரிக்கு 29.11.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Tags:    

Similar News