பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெடில் 2826 பணியிடங்கள்
பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெடில் 2826 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.;
பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் (BPNL) என்பது இந்தியாவில் கால்நடைகள் மற்றும் விவசாயிகளின் மேம்பாடு மற்றும் நலனுக்காக செயல்படும் மத்திய அரசு நடத்தும் அமைப்பாகும். இந்த அமைப்பில் பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
காலியிட விவரம்:
மத்திய கண்காணிப்பாளர்- 314 இடங்கள்
உதவி கண்காணிப்பாளர்- 628 இடங்கள்
அலுவலக உதவியாளர்- 314 இடங்கள்
பயிற்சியாளர்- 924 இடங்கள்
எம்.டி.எஸ்- 628 இடங்கள்
மொத்த காலிப்பணியிடங்கள்: 2826
சம்பளம்:
மத்திய கண்காணிப்பாளர்- ரூ.18000
உதவி கண்காணிப்பாளர்- ரூ.15000
அலுவலக உதவியாளர்- ரூ.12000
பயிற்சியாளர்- ரூ.15000
எம்.டி.எஸ்- ரூ.10000
கல்வித்தகுதி, வயது வரம்பு:
மத்திய கண்காணிப்பாளர்:
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
25-45 ஆண்டுகள்
உதவி கண்காணிப்பாளர்:
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
21-40 ஆண்டுகள்
அலுவலக உதவியாளர்:
12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
21-40 ஆண்டுகள்
பயிற்சியாளர்:
வேளாண் துறையில் பட்டதாரிகள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
21-40 ஆண்டுகள்
எம்.டி.எஸ்:
10ம் வகுப்பு படித்தவர்கள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
21-30 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம்:
மத்திய கண்காணிப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ரூ.945 செலுத்த வேண்டும்.
உதவி கண்காணிப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ரூ.828 செலுத்த வேண்டும்.
அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.708.
பயிற்சியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.591 செலுத்த வேண்டும்.
MTS பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ரூ.472 விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்தும் முறை: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த உங்கள் கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு/இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் இந்த அரசு வேலைகளுக்கு 05 பிப்ரவரி 2023 க்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் .
ஆன்லைனின் விண்ணப்பிக்க: Apply Here