தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 160 பணியிடங்கள்
TNCSC Recruitment: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 160 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.;
TNCSC Recruitment: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், இராணிப்பேட்டை மண்டலத்தில் காரீப் பருவம் 2022-2023-ல் பட்டியல் எழுத்தர்-80, பருவகால காவலர்-80 என்ற எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களில் நெல் கொள்முதல் பணிக்காக கீழ்க்காணும் இன சுழற்சி விவரப்படி பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்தும், பருவகால காவலர் பணிக்கு ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியிடங்கள் நெல் கொள்முதல் பருவத்திற்கு மட்டும் மேலும், இப்பருவகால பணி முற்றிலும் தற்காலிகமானது. குறைந்த பட்ச வயது வரம்பு 18 வயது பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும்.
காலியிட விவரங்கள்:
பருவகால பில் எழுத்தர்- 80 இடங்கள்
கல்வித்தகுதி: அறிவியல், வேளாண்மை மற்றும் பொறியியல் துறையில் பி.எஸ்சி
சீசன் வாட்ச்மேன்- 80 இடங்கள்
கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு
மொத்த காலியிடங்கள் : 160
ஊதியம்:
பருவகால பில் எழுத்தர்- ரூ.5218/- + ரூ.3449/-
(அகவிலைப்படி) மற்றும் நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ.120/-
சீசன் வாட்ச்மேன்- ரூ.5285/- + ரூ.3449/-
(அகவிலைப்படி) மற்றும் நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ.100/-
வயது வரம்பு (01-07-2022 தேதியின்படி)
OC விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு: 32 ஆண்டுகள்
MBC/ BC/ BC(M) விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு: 34 ஆண்டுகள்
SC/ ST/ SC (A) விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு: 37 ஆண்டுகள்
இராணிப்பேட்டை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன் முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நான்காவது A Block, இராணிப்பேட்டை மாவட்டம் என்ற முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரடியாக விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்கள் 03.05.2023 மாலை 5.00 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரியில் 10.04.2023 அன்று முதல் அலுவலக வேலை நாட்களில் பெற்றுக்கொள்ளலாம்.
முக்கிய நாட்கள்
விண்ணப்பத்தைப் பெறுவதற்கான தொடக்கத் தேதி: 10-04-2023
விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி: 03-05-2023