அறக்கட்டளைகள் வழங்கும் கல்வி உதவித்தொகை: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

உயர் கல்விக்கான கல்வி உதவித்தொகை : சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் அறக்கட்டளைகள் வழங்குகின்றன.

Update: 2021-11-02 03:24 GMT

கோப்பு படம்

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், ST/ PWD பிரிவினர், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மீனவ சமுதாய மாணவ, மாணவியர்களுக்கு உயர் கல்விக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையினை சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அறக்கட்டளைகள் வழங்குகின்றன.

இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதற்கான விபரம் வருமாறு:

கல்வி உதவித்தொகையின் பெயர்:

Chennai High Court Admin. General & Official Trustee Scholarships (Academic Year 2019-20 & 2020-21)

கல்வித்தகுதி: 1. மருத்துவம், பொறியியல் & தொழிற் நுட்பம், விவசாயம், துணை மருத்துவ படிப்புகள் அல்லது ஏதாவதொரு கலை & அறிவியல் பாடப்பிரிவில் தற்போது படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

2. ஏதாவதொரு பட்டப் படிப்புடன் UPSC-ஆல் நடத்தப்படும் Civil Service முதல் நிலை தேர்வில் அதிக மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், திராவிட கலாச்சாரம், கட்டிடவியல், நாட்டுப் புற கலைகள், விலங்கியல், தாவரவியல், வனத்துறை, அறிவியல் பழங்குடியின வரலாறு போன்ற ஏதாவதொரு துறையில் ஆராய்ச்சி மாணவராக இருக்க வேண்டும் அல்லது ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து Ph.D. பட்டம் பெற தகுதியானவராக இருக்க வேண்டும்.


உதவித்தொகை:

1. பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மற்றும் தங்கப் பதக்கம்.

2. UPSC - முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1,50,000 மற்றும்

தங்கப் பதக்கம்.

3.Ph.D. மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் தங்கப் பதக்கம்.

இதர தகுதிகள்: விண்ணப்பதாரர்கள் அரசு பள்ளிகள்/ அரசு உதவிபெறும் பள்ளிகள், பழங்குடியின பள்ளிகள், வனத் துறையால் நடத்தப்படும் பள்ளிகள் ஏதாவதொன்றில் தமிழ் வழியில் படித்து குறைந்தது 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்று +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் மேலே கொடுக்கப்பட்டுள்ள படி சம்மந்தப்பட்ட கல்லூரி படிப்புகளில் அரசு/அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தற்போது (2019, 2020, 2021) படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி, தற்போது படித்துக் கொண்டிருக்கும் கல்லூரிகளின் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் கல்வி சான்றிதழ்களை நேர்முகத்தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://districts.ecourts.gov.in

இந்த இணைப்பில் 27 பக்கங்களளில் முழு விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 24,25,26 வது பக்கங்களில் APPLICATION FORM உள்ளது,

மேலும் அங்கு கொடுக்கப்பட்டுள்ள முழு விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து 9.11.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Administrator General and Official Trustee of Tamil Nadu,

High Court Campus,

Chennai - 600104.

Ph. No.: 044-25342278.

Tags:    

Similar News