14 மாதங்களாக சாலைகளில் நாய்களுக்கு உணவும் மருத்துவமும் அளிக்கும் நெல்லை அனிமல் சேவர் நண்பர்கள் அமைப்பு..

கொரோனா பெருந்தொற்று பரவிய 14 மாதங்கள் சாலைகளில் நாய்களுக்கு உணவும் மருத்துவமும் அளித்து நேசக்கரம் நீட்டி இருக்கிறார்கள்,நெல்லை அனிமல் சேவர் நண்பர்கள் அமைப்பு.

Update: 2021-05-29 16:09 GMT

தெரு நாய்களுக்கு உணவளிக்க சமையல் தயாராகிறது.

கடந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நடைபயிற்சியின் போது சந்தித்த நண்பர்களால் சிந்தித்து ஆரம்பிக்கப்பட்டது அனிமல்சேவர்(Animal Saver) அமைப்பு.  ஏதோ விளையாட்டாக ஆரம்பித்த இவர்களின் சேவை பற்றி மாநகராட்சியில் பேசாத நபர்களே இல்லை என்றே கூறலாம்..

முழுஊரடங்கு காலத்தில் வீதிகளில் உணவில்லாமல் தவித்த நாய்களுக்கு உதவி செய்ய முடிவெடுத்து animal சேவர் குரூப்பில் உள்ள உறுப்பினர்களே தங்கள் கைக்காசை போட்டு இயன்ற அளவில் அவர்களே உணவு தயாரித்து மாநகராட்சியில் அனுமதி பெற்றுநகர் முழுவதும் உணவளித்து வருகின்றனர். இந்த குழுவில் வசதியானவர்கள்,பிரபலமானவர்கள்,அரசியல் அமைப்பை சார்ந்தவர்கள் என யாரும் கிடையாது.

அனைவருமே சாதாரண தனியார்  நிறுவனங்களில் வேலை பார்க்கும் அன்புள்ளம் படைத்தவர்கள். அவ்வளவே.  அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப மாத வருமானத்தில் நாய்க்காக ஒரு சிறு தொகையை  ஒதுக்கி, அதை நாய்களுக்கு உணவாக கொடுக்கிறார்கள்.

இவர்களே இணைந்து சமைப்பதால் செலவை குறைகிறது.அதனால்,  அதிக நாய்களுக்கு உணவு அளிக்க முடிகிறது என்று பெருமையுடன் சொல்கிறார்கள். இது குறித்து ஆன்மீக அன்பர் அச்சா கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்ட போது, அந்த நாய்கள் நாங்கள் சென்று பார்க்கும் போது எங்களை கண்டு அவைகள் வாலாட்டுவது எங்களுக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தருகிறது. நிலையற்று  வாழும் இந்த பூமியில் அவர்களுடைய அன்பு எங்களுக்கு பெருமையையும், சந்தோஷத்தையும் தருகிறது.

இரண்டு வருடம், மூன்று வருடங்கள் கழித்து பார்க்கக்கூடிய நாய்கள் கூட எங்களைப் பார்த்து வாலாட்டுகிறது. அதைப் போல, சில நாய்கள், நாங்கள் சாலைகளில் நிற்கும்போது, தேடி வந்து பார்த்து வாலாட்டி, எங்களிடம் அன்பு செலுத்தும்போது, நெகிழ வைக்கும் சம்பவமாக இருக்கிறது. அதைப் போல, ஒரு நாய், அதன் தலையை குடத்துக்குள்  மாட்டிக்கொண்டு , பத்து நாள்கள் உணவின்றி தவித்தது. அதை பிடித்து குடத்தை கழுத்தில் இருந்து பக்குவமாக நீக்கி எடுத்தோம். 

அதே போல் ஒரு பத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கு விபத்தின் காரணமாக அடிப்பட்டு உடைந்த  கால்களுக்கு சிகிச்சை அளித்து   காப்பாற்றியுள்ளோம். மேலும் முடிகள் உதிர்ந்து ரோமங்களற்ற நாயாக புண்ணாக காட்சியளிக்கிற நாய்களுக்கு  மருத்துவ சிகிச்சை அளித்து காப்பாற்றி, இருக்கிறோம். இவ்வாறு தொடர்ந்து எங்களால் முடிந்த உதவிகளை விலங்கினங்களுக்கு செய்து வருகிறோம்.

பெரிய அளவில் மற்றவர்களிடமிருந்து உதவி கிடைக்கவில்லை. பலமுறை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய போதும், கிடைக்காதது வருத்தத்தை அளிக்கிறது. இருந்தாலும்கூட  இருக்கும் வரை நம்மை காக்கும் நாய்களுக்கு உணவளிப்போம் என்றார்.

நம் வாசகர்களில் விலங்குகள் மீது பாசம் உள்ளவர்கள் யாரேனும் உதவ நினைத்தால் பெரிய தொகை வேண்டாம் 10 ரூபாய் அனுப்பி வைத்தால் கொரோனோ காலங்களில்  விலங்குகளும் பசியின்றி உயிர் வாழும்.

நீங்கள் அவர்களை எப்போதும் தொடர்பு கொள்ள முடியும்.

Sankaranarayanan Google pay 9629235933

Seethapathy Google pay

8903187979

Google pay

9159096965

Share to all and if contribute plz inform

அனைவருக்கும் பகிருங்கள் யாரேனும் பங்களிப்பு செய்தால் தகவல் தெரிவிக்கவும்

Tags:    

Similar News