இன்ஸ்டாநியூஸ்-தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாதவேலைவாய்ப்பு செய்திகள்
மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு வேலை முக்கிய பங்கு வகிக்கிறது;
இன்ஸ்டாநியூஸ் வேலைவாய்ப்பு செய்திகள்
மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு வேலை முக்கிய பங்கு வகிக்கிறது.பல்துறைகளின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தியா அதன் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களை தேடும் பணியில் ஈடுபடுகின்றனர்.
அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை சிறப்பாக செய்து வருகின்றோம். அரசு மற்றும் தனியார் துறைகளில் இருக்கும் காலிப் பணியிடங்களைவேலைவாய்ப்பு செய்தி மூலமாக வெளியிடுகின்றோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையும்படி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Senior Research Fellow பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அப்பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளுமாறு தகுதியானவர்களை #இன்ஸ்டாநியூஸ் சார்பில் அறிவுறுத்துகிறோம்.
நிறுவனம் : TNAU
பணியின் பெயர் Senior Research Fellow
பணியிடங்கள் : 02
கடைசி தேதி : 02.06.2021
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்கள் வாயிலாக
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அறிவிப்பில் Senior Research Fellow பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
பதிவு செய்வோர் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 02.06.2021 அன்று நடைபெற உள்ளது.
திறமை படைத்தவர்கள் வரும் 02.06.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
----------------------------------------------------------------------------
சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – தேர்வு, நேர்காணல் கிடையாது.
சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) இருந்து தகுதியானவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை #இன்ஸ்டாநியூஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம் : CMRL
பணியின் பெயர் : General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager
பணியிடங்கள் : 11
கடைசி தேதி : 02.06.2021
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager பணிகளுக்கு என மொத்தமாக 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ வயது வரம்பு :
01.04.2021 தேதியில் கீழ்கண்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும்.
General Manager – 50 வயது
Chief Vigilance Officer – 50 வயது
DGM/ JGM/ AGM – 40-47 வயது
DGM /JGM – 40-43 வயது
Manager – 28 வயது
General Manager & DGM/ JGM/ AGM & Manager – Bachelor Degree in Electrical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Chief Vigilance Officer – Any graduates அல்லது Post Graduation in Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DGM/ JGM – Bachelor Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதிவு செய்வோர் அனைவரும் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 02.06.2021 அன்றுக்குள் கூட்டு பொது மேலாளர் (HR), சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், நிர்வாக கட்டிடம், சி.எம்.ஆர்.எல் டிப்போ, பூனமல்லி உயர் சாலை, கோயம்பேடு, சென்னை – 600107 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிடவேண்டும்.