இன்ஸ்டாநியூஸ் - வேலைவாய்ப்பு செய்திகள்
மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு வேலை முக்கிய பங்கு வகிக்கிறது.
இன்ஸ்டாநியூஸ் வேலைவாய்ப்பு செய்திகள்
மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு வேலை முக்கிய பங்கு வகிக்கிறது.பல்துறைகளின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தியா அதன் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களை தேடும் பணியில் ஈடுபடுகின்றனர். அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை சிறப்பாக செய்து வருகின்றோம். அரசு மற்றும் தனியார் துறைகளில் இருக்கும் காலிப் பணியிடங்களைவேலைவாய்ப்பு செய்தி மூலமாக வெளியிடுகின்றோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையும்படி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Senior Research Fellow பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அப்பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளுமாறு தகுதியானவர்களை #இன்ஸ்டாநியூஸ் சார்பில் அறிவுறுத்துகிறோம்.
ECHS கோவை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.75,000/-
முன்னாள் சேவையாளர் பங்களிப்பு சுகாதார திட்டம் (ECHS) கோவை (தமிழ்நாடு) ஆனது Officer-in-Charge & Dental Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் எங்கள் #இன்ஸ்டாநியூஸ் மூலம் வயது வரம்பு, கல்வி தகுதி, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் ECHS தமிழ்நாடு
பணியின் பெயர் Officer-in-Charge Polyclinic & Dental Officer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க
கடைசி தேதி 04.06.2021
விண்ணப்பிக்கும்
முறை Offline
Officer-in-Charge Polyclinic – 01
Dental Officer – 01
Dental Officer வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும்.
Officer பதவிக்கு வயதானது அதிகபட்சம் 62 க்குள் இருக்க வேண்டும்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து Graduate/ BDS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Officer-in-Charge Polyclinic – ரூ.75,000/
Dental Officer – ரூ.75,000/-
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 10.06.2021 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும். Stn HQ ECHS, Red Fields Coimbatore-18 என்ற முகவரிக்கு 04.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
#இன்ஸ்டாநியூஸ் வேலைவாய்ப்பு செய்திகள்
சென்னை துறைமுக கழகத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் வேலை.
சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது அங்கு காலியாக உள்ளதாக Chief Engineer, Secretary & Deputy Chief Accounts Officer பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றினை இன்ஸ்டாநியூஸ் வாயிலாக நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிறுவனம் Chennai Port Trust
பணியின் பெயர் Chief Engineer, Secretary & Deputy Chief Accounts Officer
பணியிடங்கள் 4
கடைசி தேதி 04.06.2021 & 05.06.2021
விண்ணப்பிக்கும்
முறை ஆன்லைன் & விண்ணப்பங்கள்
Chief Engineer, Secretary & Deputy Chief Accounts Officer பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபட்சம் 40-55 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்
அரசு அனுமதி பெற்று செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree/ Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
பதிவாளர்கள் Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
தகுதியானவர்கள் வரும் 04.06.2021 & 05.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாகவும், அறிவிப்பில் உள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலமாகவும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மீண்டும் #இன்ஸ்டாநியூஸ் வேலைவாய்ப்பு செய்திகள் நாளை....