சுற்றுப்புறத்தை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை...படிங்க..

Welcome Speech Quotes in Tamil-நாம் நன்றாக சுத்தமாக உடை உடுத்திக்கொண்டால் மட்டும் போதாது. வீட்டிற்குள்ளும் வெளியிலும் துாய்மையாக வைத்திருப்பது அனைவரின் கடமையாகும்.

Update: 2022-11-07 11:41 GMT

Welcome Speech Quotes in Tamil

Welcome Speech Quotes in Tamil

Welcome Speech Quotes in Tamil

இந்தியாவில் நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு வரும் சிறப்புவிருந்தினர் உட்பட அனைவரையும் வரவேற்று முன்னதாக பேசுவர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியானது ஒரு கல்லுாரியில் நடக்கும் சுற்றுப்புற பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநில வனத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். மாவட்ட கலெக்டர், போலீஸ் உயரதிகாரி , மாசுக்கட்டுப்பாட்டுவாரிய உயரதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர், ஆசிரிய,ஆசிரியைகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்கின்றனர்.விழாவில் பேசும்போது, இந்த இனிய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வந்திருக்கும் மாநில வனத்துறை அமைச்சர் அவர்களை இக்கல்லுாரி சார்பில் வருக, வருக என அன்புடன் வரவேற்கிறோம்.

Welcome Speech Quotes in Tamil

மாசடைந்த  நதியினை துாய்மைப்படுத்தும் பணியில்  ஈடுபட்டுள்ள  தன்னார்வலர்கள் (பைல்படம்)

Welcome Speech Quotes in Tamil

அதேபோல் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் உயரதிகாரி அவர்களையும் வருக வருக என வரவேற்கிறோம்.

இந்தியாவின் சுற்றுப்புற பாதுகாப்பில்அக்கறை கொள்ளும் விதமாக மத்திய அரசின் சார்பில் இதனைக் கண்காணிக்கவே ஒரு துறையினை நிர்மாணித்துள்ளது. அத்துறைதான் மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் என்பது. இத்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அலுவலர்கள் என அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

அதேபோல் இந்த இனிய விழாவிற்கு தலைமையேற்றிருக்கும் கல்லுாரி முதல்வர் மற்றும் ஆசிரிய , ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியர் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம். மேலும்இவ்விழாவில் கலந்துகொள்ள வந்திருக்கும் அரசியல் கட்சி சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்கிறோம். இவ்விழாவில் வனத்துறை அமைச்சருக்கு நினைவுப் பரிசினை தற்போது கல்லுாரி முதல்வர் அவர்கள் வழங்குவார். அவருக்கு நினைவு பரிசு வழங்கப்படுகிறது. பின்னர் அமைச்சர் பேசும்போது,

Welcome Speech Quotes in Tamil

Welcome Speech Quotes in Tamil

நம் பாரத தேசமானது அனைத்து துறைகளிலும்  தற்போது முன்னேற்றத்தினைக் கண்டுள்ளது. விரைவில் வல்லரசு ஆகும் நிலையை நாம் அனைவரும் ஒன்றுபட்டால் அந்த நிலையினையும் உருவாக்க முடியும்.ஒவ்வொரு இந்தியனுக்கும் அந்த கடமை  உள்ளது. அதற்காக அவர்கள் செய்ய வேண்டியது நம் நாட்டிலுள்ள அனைத்து மாநிலத்திலுமே சுற்றுப்புறத்துாய்மையைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையில் முதலாவதாக திகழ்கிறது.

குறிப்பாக வனத்தினைப் பாதுகாத்தாலே நம் சுற்றுப்புறமானது 80 சதவீத பாதுகாப்பினை அடைந்துவிடும். நாட்டிலுள்ள வனப்பகுதிகளை மக்கள் ஆக்கிரமிக்காமல் இருந்தால் பாதி பாதுகாப்பு கிடைத்துவிடும். ஆக்கிரமிப்புகள் அதிகம் இருப்பதால்தான் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. விவசாய பயிர்களை அழிக்கிறது. விலங்குகள் வாழும் வனத்தில் மனிதர்கள் ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டிக்கொண்டால் அவைகள் எங்கே வாழும்? அதற்கு எங்கே இடம்? விலங்குகள் ஊருக்குள் புகுந்தன என்பது தவறான தகவல். அது அதனுடைய இடத்திற்கு தான் வந்து செல்கிறது. நாம்தான் ஆக்கிரமித்துள்ளோம்.

Welcome Speech Quotes in Tamil

சுற்றுப்புறத்தினை பாதுகாப்பதில் நம் அனைவரின் கடமை...மரக்கன்றுகள் வளர்த்து  பாதுகாப்போம்..(பைல்படம்)

இதுபோல் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கிட்டும். அடுத்தபடியாக உலக அளவில் ஓசோனில் பெரிய துளை விழுந்துகொண்டே வருகிறது. காரணம் அதிகப்படியான வாகன பயன்பாடு மற்றும் எரிபொருள் பயன்பாட்டினால் வெப்பம் அதிகமாகி இதுபோன்ற நிலை உருவாகி வருகிறது. இதனைச் சமன் செய்ய நாம் சுற்றுப்புறத்தில் இப்போதே மரக்கன்றுகளை அதிகம் வளர்த்து பசுமையான சூழலை ஏற்படுத்தி இந்த புற வெப்பத்தினைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியினை மேற்கொள்ள வேண்டும். இவையனைத்தும் நாம் மேற்கொண்டால் சுற்றுப்புறத்தினை பாதுகாக்க முடியும் எனக்கு வாய்ப்பு அளித்தவர்களுக்கு நன்றி கூறி அமர்கிறேன் என பேசினார். 

அடுத்தபடியாக மாவட்ட கலெக்டர் பேசும்போது, சுற்றுப்புற பாதுகாப்பு என்பது அனைவரின் கடமை ஆகும். முதலாவதாக நாம் தினந்தோறும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்தாலே சுற்றுப்புறம் துாய்மையாகிவிடும். வெளியில் கடைகளுக்கு செல்கையில் பழைய மாதிரி அனைவருமே துணிப்பைகளைக் கொண்டு சென்றால் வியாபாரிகள் நெகிழியிலான பையை உபயோகிக்க மாட்டார்கள். இந்த மனக்கட்டுப்பாட்டினை நாம் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இதற்கு ஒரு முடிவு கிட்டும் .ஒவ்வொரு பள்ளியிலும் அதிக அளவிலான மரக்கன்றுகளை நடவேண்டும். தற்போதுஇக்கல்லுாரியில் உள்ளது போல் மரங்கள் அதிகம் இருக்கும் பட்சத்தில் நம் சுற்றுப்புறமும் ஆரோக்யமாகவே இருக்கும் என பேசினார்.

Welcome Speech Quotes in Tamil

Welcome Speech Quotes in Tamil

அடுத்ததாக போலீஸ் உயரதிகாரி பேசும்போது, தற்போது இந்தியாவில் டூவீலர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் வெளிவரும் கார்பன் மோனாக்ஸைடு நம் சுற்றுப்புறத்தினை பாதிக்கிறது. இது மட்டும் அல்லாமல் பேக்டரி புகை, என பல வகைகளில் புகைகள் வெளியேறி ஓசோன் மண்டலத்தினை பாதிக்கிறது. இதனைத் தடுக்க நாம் அனைவரும் அவசரத் தேவைக்கு மட்டும் வாகனங்களை உபயோகிக் கவேண்டும். நெடுந்தொலைவு செல்லவேண்டுமானால் பஸ்களில் செல்லலாமே? நடந்து செல்லலாம்? இதுபோல் நடந்தால் புகையின் அளவைக் குறைக்கலாம் என பேசினார்.

Welcome Speech Quotes in Tamil

Welcome Speech Quotes in Tamil

அடுத்ததாக மாசுக்கட்டுப்பாட்டுவாரிய அதிகாரி பேசும்போது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இப்பிரச்னை அதிகரித்துள்ளது. இதற்காக எங்கள் துறை சார்பில் கடும் நடவடிக்கையினை மேற்கொள்கிறோம். சாயப்பட்டறை மற்றும் ரசாயனக் கழிவுகளை நாம் ஆற்றில் கலப்பதற்கு முதலில் நிறுத்தவேண்டும். இரவு நேரங்களில் இதுபோன்று செய்வதால் பல தீங்குகள் உருவாகிறது. நதி நீரின்துாய்மை மாசுபடுகிறது. இதுபோல் பல பிரச்னைகளில் நாம்தான் நம்மை சட்ட திட்டங்களுக்குட்பட்டு நடந்துகொள்ளவேண்டும். அதனை விடுத்து சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள் மீது இத்துறை கடும் நடவடிக்கையினை மேற்கொள்ள தயங்காது என பேசினார்.

Welcome Speech Quotes in Tamil

பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே மரக்கன்றுகள் நடும் பணிகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் 

Welcome Speech Quotes in Tamil

இறுதியில் முடிவுரை பேசிய கல்லுாரி முதல்வர் நாம் அனைவரும் ஆரோக்யத்துடன் வாழ நல்ல காற்று , சுற்றுப்புறம் என்பது அவசியமான ஒன்று. நாம் வாழும் இடத்தினை எப்போதும் துாய்மையாக வைத்திருக்க வேண்டும். குப்பைகளை உரிய இடத்தில் கொண்டு போய் கொட்ட வேண்டும்.இதுபோல் வேண்டாத இடத்தில்குப்பை கொட்டுவோரைக் கண்டால் கல்லுாரி மாணாக்கர்களாகிய நீங்கள் கூட கண்டித்து அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் . இதுபோல் ஒவ்வொருவரும் அவர்களுடைய பங்கிற்காக உழைத்தோமானால் இச்சமுதாயம் சுற்றுப்புற பாதுகாப்பில் சிறந்து விளங்கும் என பேசினார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News