வித்தியாசமாக சிந்திக்க வைக்கும் விளையாட்டு விடுகதை: விருப்பத்தோடு படிச்சு பாருங்க....
vidukathaigal விடுகதைகளில் பல வகைகள் உண்டு. எந்த விடுகதையாக இருந்தாலும் நமக்கு சிந்திக்கும் சக்தியைத்துாண்டும் கேள்விகளாகவே இருக்கும். சும்மா கேட்டவுடன் சொல்லும் வகையில் விடுகதைகள் இருக்காது. சற்று சிந்திக்கணும்...படிங்க...
vidukathaigal
. விடுகதை என்றால் என்ன? .ஓர் இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விவரிக்காமல்) விவரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை ஆகும். இதை நொடி என்றும் பழம் தமிழில் பிசி என்றும் கூறலாம். விடுகதையைப் பொதுமக்கள் இலக்கிய வடிவமாகவும் வாய்மொழி இலக்கியமாகவும் சிலர் அடையாளப்படுத்துவர். குறிப்பாகத் "தாய்மார்கள் தம்மக்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் விடுகதைகளை எழுப்புவதும், இளஞ்சிறார் அவற்றுக்குரிய விடைகளை வழங்குவதும் வழக்கமாகும்.
விடுகதைகளைப் பொறுத்தவரை ஒருசிலவிடுகதையில் கேள்வியிலேயே விடைகள் மறைந்து இருக்கும். அல்லது கேள்வியை சற்று யோசித்தால் உடனடியாக விடை கிடைத்துவிடும். ஒரு சில விடுகதைகளில் கொஞ்சம் மூளையைக் கசக்கினால் மட்டுமே அந்த விடுகதைக்கான விடையினை நம்மால் சொல்லமுடியும். அந்த வகையில் ஒரு சில விடுகதை உதாரணங்களைப் பார்க்கலாம்.
அறிவினைச் சோதிக்க அக்காலம் முதல் இக்காலம் வரை பல போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகள் நேரிடையான போட்டிகளாகவும் திருவிழாக்காலங்களில் ஒவ்வொரு ஊரிலும் நடத்தப்படுவது வழக்கம்.இதுமட்டும்அல்லாமல் பத்திரிகைகள், நாளிதழ்களில் இது சம்பந்தமான போட்டிகள் வாரந்தோறும் நடத்தப்படுகிறது. நம்முடைய அறிவினைச் சோதிக்கும் வகையில் விடுகதைகள், புதிர் போட்டிகள், குறுக்கெழுத்துப்போட்டிகள், இரண்டுக்கும் வித்தியாசம், அல்லது ஒரு கேள்வி கேட்டு அதற்கான பதில். ஒரு கேள்வி கேட்டு அந்த விடையில் ஒருசில எழுத்துகள் மிஸ்ஸிங்... அதனைக் கண்டுபிடித்தல் என பல போட்டிகள் பத்திரிகைகளில் வெளிவருகிறது. வாசகர்கள் இதனை எழுதி அதற்குள்ள கூப்பனோடு அனுப்பினால் அவர்களுக்கு பரிசுகளும் தரப்படுகிறது.
vidukathaigal
vidukathaigal
இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் இதுபோன்ற அறிவுக்கூர்மையான போட்டிகளில் குட்டீஸ்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்.நீங்கள் கேள்வி கேட்கும்போதே பதில் சொல்லிவிடுவார்கள் சில வாண்டுகள். அந்த அளவிற்கு அவர்கள் இதில் ஈடுபாட்டோடு இருப்பார்கள். இதுபோன்ற விளையாட்டுகள் அனைத்தும் நம் மூளையை புத்துணர்ச்சி யோடு வைக்க பெரும் வழி வகுக்கிறது. எப்போது பார்த்தாலும் பாடம் பாடம் , ஆபீஸ் வேலை , தொழில் என இருப்போருக்கு இதுபோன்ற விளையாட்டுகள் ஒரு டைம் பாஸாக இருப்பதோடு மனநிறைவையும் தருகிறது. அதாவது உங்களுடைய விடை சரியாக இருந்தால் உங்களுக்கே உங்கள் மீது அபரிதமான தன்னம்பிக்கை மேலோங்குகிறது. இதேபோல்தான் குழந்தைகள், மாணவ, மாணவிகள் தேடித்தேடி விடையைக் கண்டுபிடிக்கும்போது அவர்களுடைய தன்னம்பிக்கையானது சிறக்கிறது. எனவே இதுபோன்ற விளையாட்டுகளை காலம் காலமாக நாம் விளையாடிக்கொண்டேயிருக்க வேண்டும். விளையாட்டுகளுக்கு என பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பெரும்பாலும் வாசிப்பு திறன் அதிகம் உள்ளவர்கள் இது மாதிரியான போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். காரணம் அவர்களுக்கு பல விஷயங்கள் தெரிய வாய்ப்புள்ளது. அதனால் அவர்களுக்கு எளிதாக உள்ளது . எனவே உங்கள் குழந்தைகளையும் அன்றாடம் உலக நடப்புகள் குறித்து வாசிக்க சொல்லுங்கள் அது ஸ்மார்ட் போனாக இருந்தாலும் சரி, நாளிதழாக இருந்தாலும் சரி.
vidukathaigal
vidukathaigal
உதாரணத்துக்காக ஒரு சில விடுகதைகள்.....
உடல் உண்டு தலை இல்லைகை உண்டு விரல் இல்லைஅது என்ன? -... சட்டை
கையை வெட்டுவார்கழுத்தை வெட்டுவார்ஆனாலும் நல்லவர்அவர் யார்?.....டைலர்
சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அஃது என்ன?.......காய்ந்த சிவப்பு மிளகாய்
ஆயிரம் தச்சர் கூடி, அழகான மண்டபம் கட்டி, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அஃது என்ன? ...தேன்கூடு
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அஃது என்ன?....தவளை....
எண்களுக்கான விடுகதை
vidukathaigal
"ஒரு குடந்தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது" என்று சிறுவர்கள் விளையாடும் விளையாட்டில் ஒன்று முதல் பத்து வரை எண்ணிக் கற்கும் முறை இன்றும் உள்ளது. இதில்
டா டா டா டா டா டா அது
டா டா டா டா டா டா டா டா டா டா மாட்டை
இதனை ஆறுடா, பத்துடா மாட்டை என எண்ணிச் சேர்த்து சிறுவர் விடுகதையாகப் போட்டு விளையாடுவர்
எட்டெழுத்திலுள்ள ஒரு ஊரின் பெயரைத் தெரிவிக்க கீழ்க்காணும் விடுகதை சொல்லப்படுகிறது.
ஒன்றும் இரண்டும் சேரில் செல்வம்
மூன்றும் நான்கும் சேரில் குளம்
மூன்றும் ஐந்தும் ஒன்றும் சேரில் கங்கை
மூன்றும் ஆறும் சேரில் பெருமை
ஏழும் எட்டும் சேரில் பருகு அஃது என்ன?
-எண்ணை வைத்து எழுத்தைச் சேர்த்து திரு, வாவி, வானதி, வான், குடி என இணைத்துப் பின் "திருவாவினன்குடி" என்ற விடையளிப்பர்,
பாடலாக இருக்கும் விடுகதை
சங்க காலத்து தனிப் பாடல் திரட்டில் காணப்படும், பாடல் வடிவில் உள்ள ஒரு விடுகதை. இது சுந்தரகவிராயர் என்பவரால் பாடப்பட்ட பாடல். தமிழ்நயத்துடன், மரம் என்ற சொல் மீண்டும் மீண்டும் வருமாறு அமைக்கப்பட்ட பாடல். ஆனால் இங்கே மரம் என்ற ஒரே சொல்லால், வெவ்வேறு பொருள் வரும்படி பாடல் அமைக்கப்பட்டுள்ளது.
மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,
மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார
மரமது - அரச மரம் (அரசு) - இங்கே அரசு என்பது அரசனைக் குறிக்கிறது.
vidukathaigal
vidukathaigal
மரத்திலேறி - மா மரம் = மா என்பது குதிரை எனப் பொருள் படுகின்றது.
மரமதைத் தோளில் வைத்து - வேல மரம் (வேல்)
அதாவது அரசன் குதிரையிலேறி, வேலைத் தோளில் வைத்துச் செல்கின்றான். அப்போது,
மரமது - மீண்டும் அரசு
மரத்தைக் கண்டு - வேங்கை மரம் - இங்கே வேங்கை என்பது வேங்கைப் புலியைக் குறிக்கிறது.
மரத்தினால் - மீண்டும் வேல் -
மரத்தைக் குத்தி - மீண்டும் வேங்கை
அதாவது அரசன் வேலினால் புலியைக் குத்துகின்றான். பின்னர்,
மரமது வழியே சென்று - மீண்டும் அரசு, வளமனைக்கேக்கும்போது, அதாவது அரசன் வீடு நோக்கிச் செல்லும்போது,
மரமது கண்ட மாதர் - மீண்டும் அரசு, அதாவது அரசனைக் கண்ட பெண்கள்,
மரமுடன் - ஆல் மரம்
மரமெடுத்தார் - அத்தி மரம்
அதாவது ஆல் + அத்தி = ஆலத்தி, அரசனைக் கண்ட பெண்கள் ஆலத்தி எடுத்தார்.
இப்பாடலின் பொருளை முழுமையாகக் கூறுவதாயின்:
அரசன் ஒருவன், தன் தோளிலே வேலை ஏந்தி, குதிரையில் ஏறி, வேட்டைக்குச் சென்றான். அங்கு ஒரு வேங்கைப்புலியைக் கண்டு, தன் வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் தனது அரண்மனைக்குச் சென்றான். புலியைக் கொன்று வெற்றிவீரனாகத் திரும்பிவரும் அரசனைக் கண்ட பெண்கள் அரசனுக்கு ஆலத்தி (ஆரத்தி) எடுத்து வரவேற்றனர்.இதுபோல் தமிழ் மொழியில் விடுகதைகள் பல நிலைகளில் உருவாக்கப்பட்டு வ ருகின்றன. ஒரு சிலர் இதனை புத்தகமாகவும் வெளியிட்டுள்ளனர். நாம் நேரம் கிடைக்கும்போது அருகிலுள்ள நுாலகங்களுக்கு சென்று இதுபோன்ற புத்தகத்தினை தேடி வாசித்து நம் அறிவின் கூர்மையை செழுமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
vidukathaigal
vidukathaigal
*உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன? தக்காளி
*ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாவாடை அது என்ன? தோடு
*தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்? நுங்கு
*செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன? தொலைபேசி
*வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை, கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை, வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை – அவன் யார்? சிலந்தி
*பார்க்கத்தான் கறுப்பு; ஆனால் உள்ளமோ சிவப்பு. நமக்குத் தருவதோ சுறுசுறுப்பு அது என்ன? தேயிலை
*பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்? சீப்பு
*கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது? உப்பு
*பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்? சீப்பு
*வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன? அகப்பை 6. காதை திருகினால் பாட்டு பாடுவான்? அவன் யார்? ரேடியோ
vidukathaigal
vidukathaigal
*இவனும் ஒரு பேப்பர் தான்; ஆனால், மதிப்போடு இருப்பான். அது என்ன? பணம்
*. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு. கொசு
*கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன? பூசணிக்கொடி
*. எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்? குடை*தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்? தொலைபேசி
*. பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன? தேங்காய்
*தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்? மீன் வலை
*படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன? பட்டாசு
*உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன? பாய்
*மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன? சிலந்தி வலை -
*கீழேயும் மேலேயும் மண்; நடுவிலே அழகான பெண். அது என்ன?மஞ்சள்செடி.
*சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ? அலாரம்
*. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன? தராசு
*பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான். அவன் யார்? தேன்
*நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன? சிலந்தி