மூவேந்தர்களை விட புகழ்பெற்றவன் முல்லைக்கு தேர் கொடுத்த வேள்பாரி

Paari Vallal History in Tamil-சேர, சோழ, பாண்டிய மன்னர்களான மூவேந்தர்களை விட சிறப்பு மிக்க மன்னராக வலம் வந்தவர் வேள்பாரி. இவரது கொடைத்தன்மையே இதற்கு காரணம்..

Update: 2022-11-08 11:18 GMT

Paari Vallal History in Tamil

Paari Vallal History in Tamil-வேள்பாரி எனும் மன்னன் பறம்புமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னன் ஆவார். பறம்பு நாடு என்பது 300 ஊர்களைக் கொண்டதாக அக்காலத்தில் விளங்கியது. இவர் கடைச்சங்க காலத்தினைச் சேர்ந்த கடையெழு வள்ளல்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.

பறம்பு மலையின் தற்போதைய தோற்றம்  (பைல்படம்)

பறம்பு என்பது மலையையும் அதனைச் சார்ந்த பகுதியைக்குறிப்பதாகும். பறம்பு மலை என்பது பின்னர் பிறம்பு மலையாக மாறியது. தற்காலத்தில் இது பிரான்மலை என மருவியுள்ளது. தமிழகத்தினை ஆண்ட பாண்டியர்களுடைய அரசின் எல்லைப்பகுதியாக சுட்டிக்காட்டப்பட்டதுதான் பறம்பு மலையாகும். பக்தி இலக்கியத்தில் இம்மலையானது கொடுங்குன்றம் என அழைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ளது திருப்பத்துார். தமிழகத்தில் இரண்டு திருப்பத்துார் உண்டு. ஒன்று வடஆற்காடு மாவட்டத்தில்  உள்ளது. இது சிவகங்களை ஒன்றியத்தில்  கிருங்காக்கோட்டை என்னும் ஊரின் அருகிலுள்ளது. மன்னன் பாரியின் ஆட்சிக்குட்பட்டுஅக்காலத்தில் 300 கிராமங்கள்இருந்தன. சேர, சோழ, பாண்டிய மன்னர்களைவிட நீங்காப் புகழ் பெற்றவர் . பாரி ஆவார். காரணம் இவரது கொடைத்தன்மையே.கேட்பவர்களுக்குஇல்லை என்று சொல்லாத பண்பினைக் கொண்டிருந்தமையால் இவர் இத்தகைய புகழினை மக்களிடம் பெற்றிருந்தார் என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஓவியரால் வரையப்பெற்ற  கடையெழு வள்ளல்களில் ஒருவரான வேள்பாரியின் போட்டோ (பைல்படம்)

இலக்கிய புலவர் கபிலர் பாரியின் நண்பர் ஆவார். பாண்டியநாட்டிலுள்ள பிரான்மலை அருகே உள்ள திருவாதவூரில் பிறந்தவர் கபிலர் ஆவார். சங்கத்தமிழின் இலக்கியத்தில் அதிகமான பாடல்களைப் பாடியவர் என பெயர் பெற்றவர். இவருடைய கவிதைகள் அனைத்தும் கலையழகு கொண்டதாகவே இருந்தது இவரின் தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. 'பொய்யாநாவிற்கபிலர்' என்று புகழப்படுபவர். பாரியைப் பற்றி இறவாப்புகழுடைய பாடல்களைப்பாடியவர் கபிலர்.

வேள்பாரியின் புகழ்

தமிழகத்தினை ஆண்ட மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அக்காலத்தில் மிகவும் சிறப்பாக ஆட்சியை செய்துவந்தனர். இக்காலத்தில்தான் முல்லைக்கு தனது தேரினை பரிசாக அளித்த கடையெழுவள்ளல்களில் ஒருவரான பாரியின் புகழானது இதனால் தென்னகம் முழுக்க பரவியது.கேட்பவர்களுக்குஇல்லை என்று சொல்லாத குணம் கொண்ட மன்னராக பாரி அக்காலத்தில் திகழ்ந்ததால் பொதுமக்களிடம் இவரது பெயரானதுநிலைத்து நின்றது. இறவாப்புகழைப்பெற்ற பாரி மூவேந்தரால் வஞ்சித்துக் கொல்லப்பட்டார்.

அங்கவை -சங்கவை

பறம்பு மலையில் 300 கிராமப்பகுதிகளில் தன் புகழ் முழுவதும் பரவும்அளவுக்கு தாராள மனமுடையவராக வேள்பாரி ஆட்சி செய்துவந்தார். அவரிடம் யார்போய்கேட்டாலும் கேட்டது கிடைக்கும்.அந்த அளவிற்கு தாராள குணம் படைத்தவராக அவர் வாழ்ந்ததால் அவரது புகழ் அவர் ஆட்சி செய்த குக்கிராமங்களிலும் பரவியது. இவர் மூவேந்தர்களால் கொல்லப்பட்டதால் இவருக்கு 2 மகள்களான அங்கவையும் சங்கவையும் எந்த வித ஆதரவின்றி தவித்து நின்றனர். இவர்களுக்கு ஒளவையார் வழிகாட்டியாக இருந்து தேவையான உதவிகளைச் செய்து தந்தார். திருமணமாகாத நிலையில் இருந்த இரண்டு பெண்களுக்கும் மணம் முடிக்க ஒளவை எண்ணியபோது மூவேந்தர்கள் அதனைத் தடுக்க முற்பட்டனர். ஔவையார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கரபுரநாதர் கோவிலில் மணம் செய்து வைத்தார். அந்தக் கோவில் தற்போது சேலத்தில் உத்தமசோழபுரம் (சோழன் இருந்த இடம்) என்ற பகுதியில் உள்ளது. மேலும் அருகில் வீரபாண்டி (பாண்டியன் இருந்த இடம்), சேலம் (சேரநிலம்-சேரன் இருந்த இடம்) உள்ளது. பாரியை ஒளவைப் பெருமாட்டியும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

எழுத்தாளரும் எம்.பியுமான சு . வெங்கடேசன் எழுதிய வேள்பாரி புத்தகம் (பைல்படம்)

பாரி வள்ளல்

நடமாடும் மனிதர்களுக்கே உதவாத காலத்தில் படர்வதற்குக் கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே ஈந்த புகழ்ச்செயலே காரணம் என்பர். ஒரு முல்லைக் கொடிக்காகத் தான் ஊர்ந்து வந்த தேரை ஈந்த சிறப்பால் பாரி வள்ளல்களிலேயே தலைசிறந்தவராகப் போற்றப்படுகின்றார்.

இதனைக் கபிலர் சிறப்பித்துப் பாடுகின்றார். ஆளுடைய நம்பி என்று புகழ்பெற்ற சுந்தரர் -'திருத்தொண்டத்தொகை' என்ற புகழ்பெற்ற பதிகத்தைப் பாடியவர் - பாரியையே கொடைக்கு எல்லையாகச் சுட்டுவர். பாரியைப் பற்றிய பாடல்கள் புறநானூறு என்னும் சங்கத்தொகை நூலுள் பல உள்ளன.

வேள்பாரி புத்தகம்

ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்துகொண்டிருக்கும் சரித்திர புனைகதைத் தொடரான வேள்பாரி, 100வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகாலத்தில் புனைகதைத் தொடரொன்று இத்தனை வாரங்கள் வெளியாவது இதுவே முதல் முறையாகும்.

வேள்பாரி தொடரின் முதல் அத்தியாயம் ஆனந்த விகடனின் 2016ஆம் ஆண்டு தீபாவளி சிறப்பிதழில் வெளியானது. இதன் நூறாவது அத்தியாயம் வந்துள்ளது. இதனைச் சிறப்பிக்கும் வகையில் வாசகர்களை இணைக்கும் விழா ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"இந்தத் தொடரை முதலில் எழுத ஆரம்பித்தபோது 50-55 வாரங்கள் வரைதான் வருமென நினைத்தேன். ஆனால், 50 வாரங்களைத் தாண்டியபோது பாதிக் கதைகூட முடியவில்லை. வாசகர்களின் வரவேற்பும் இருந்ததால், விகடனிலும் தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தினார்கள். இப்போது 100வது வாரத்தை எட்டியுள்ளது" என்கிறார் வேள்பாரி தொடரின் ஆசிரியரும் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளருமான சு. வெங்கடேசன்.

"தமிழ்நாட்டின் வாழ்வாதாரச் சிக்கல்களை அந்த காலகட்ட மனிதர்களும் மன்னர்களும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை வேள்பாரியிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். மூவேந்தர்கள் வணிகர்களுக்கு ஆதரவாக இயற்கை வளங்களைப் பற்றிக் கவலைப் படாமல் இருந்த நிலையில், ஓர் இனக் குழுத் தலைவனான பாரி எப்படி இயற்கையைக் காப்பாற்ற எப்படி போராடினான் என்பதுதான் மையப்புள்ளி. அதற்காகவே இந்தத் தொடரை வாராவாரம் படித்துவந்தேன்" என்கிறார் ஒரு வாசகர்.

இந்தத் தொடரில் வரும் போர்க் காட்சிகள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. "போர்க்காட்சிகள் என்றால் புராணங்களில் வரும் மந்திர - தந்திரக் காட்சி பற்றிய பதிவுகள் மட்டுமே இங்கு மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருகிறது. நமது வீரக்கலைகள் பற்றி இங்கு முறையாக தொகுக்கப்படவில்லை."

"கோட்டைகளிலும் அரண்மனைகளிலும் எத்தனை விதமான பொறிகள் இருந்தன என்பதை சிலப்பதிகாரம் பட்டியலிடுகிறது. எதிரிகளை தாக்குவதற்க்கு இத்தனை வகையான பொறிகள் இருந்திருக்குமேயானால் மற்ற ஆயுதங்கள் எவ்வளவு இருந்திருக்கும்? நமது பழந்தமிழ் இலக்கியங்களிலும் வாய்மொழி மரபுகளிலும் ஆயுதங்களைப் பற்றியும், போர்க்கருவிகள் பற்றியும், போருக்கான வேலைப்பாடுகள் பற்றியும் வீரக்கலைகள் பயிற்றுவிக்கும் முறைபற்றியும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டேன். அதனடிப்படையில்தான் இப்போர்க்களக் காட்சியை உருவாக்கினேன்" என்கிறார் சு. வெங்கடேசன்.

ஆனந்த விகடன் இதழில் இதற்கு முன்பாக தில்லானா மோகனாம்பாள் தொடர் 100 வாரங்களுக்கு மேல் வெளியானது. இதற்குப் பிறகு சாண்டில்யனின் சில கதைகள் நூறு வாரங்களுக்கு மேலாக வெளியாகியுள்ளன. ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் வார இதழ் ஒன்றில் தொடர்கதை ஒன்று 100 வாரங்களுக்கு நீள்வது இதுவே முதல் முறையாகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 


Tags:    

Similar News