ஈரோட்டில் சிறந்த 5 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
ஈரோடு மாவட்டத்தில் சிறந்து விளங்கும் 5 கலை அறிவியல் கல்லூரிகள் குறித்த தகவல்கள்.
Arts and Sciences Colleges in Erode ஈரோடு மாவட்டத்தில் சிறந்து விளங்கும் 5 கலை அறிவியல் கல்லூரிகள் பட்டியலில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அதன் சிறப்பை பெறுகின்றன. இந்த தரவரிசை கல்லூரிகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதி, பணிபுரியும் ஆசிரியர்களின் தரம், வளாக வேலை வழங்கும் நிறுவனங்கள் போன்றவைகளின் அடிப்படையில் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஜே.கே.கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (J.K.K. Nattraja College of Arts & Science)
இக்கல்லூரி நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரியாகும். இது 1974 இல் நிறுவப்பட்டது. இக்கல்லூரி பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவுப் பெற்றது. இங்கு கலை, வணிகம் மற்றும் அறிவியல் என 11 படிப்புகள் வழங்கப்படுகின்றன
கல்லூரியானது பல்கலைக்கழக மானியக் குழுவால் (யுஜிசி) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது , இந்தியாவின் தமிழ்நாடு ஈரோடு , நஞ்சனாபுரத்தில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஈரோட்டில் உள்ள ஒரு கல்வி நிறுவனமாகும், இது NAAC (2013) ஆல் மறு அங்கீகாரம் பெற்றது, கலை மற்றும் அறிவியல் பிரிவில் திட்டங்களை வழங்குகிறது. இது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு இணை கல்வி நிறுவனமாகும். இக்கல்லூரியில் 23 பாடப்பிரிவுகள் உள்ளன
வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
ஈரோடு, திண்டலில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவுப்பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி 1970இல் தொடங்கப்பட்டது
இக்கல்லூரியில் 23 இளநிலைப் படிப்புகளும், 13 முதுநிலைப் பாடப் பிரிவுகளும் உள்ளது. இக்கல்லூரியில் 250 ஆசிரியர்களும், 120 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் உள்ளனர். மேலும் இக்கல்லூரியானது தேசிய தர மதிப்பீடு நிா்ணய ஆணையத்தின்(NAAC) அதிகப்பட்சமான A அங்கீகாரம் பெற்றுள்ளது.
கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. ஆண், பெண் இருபாலரும் பயிலும் ஒரு அரசு உதவி பெறும் கல்லூரி. இக்கல்லூரிக்கு 1987 ஆம் ஆண்டு முதல் தன்னாட்சி தகுதி வழங்கப்பட்டது. இது பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
இங்கு பதினெட்டு இளங்கலைப் படிப்புகளும்,பதினாறு முதுகலைப் படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஈரோடு பகுதியிலுள்ள இரங்கம்பாளையம், சென்னிமலை சாலையில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1971-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
ஈரோடு கலைக் கல்லூரியானது 'என்ஏஏசி'யிடம் 'ஏ' தரச்சான்று அங்கீகாரம் பெற்றது. இக்கல்லூரி கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்ற ஒரு தன்னாட்சி இணைக் கல்வி நிறுவனமாகும். இந்த அறக்கட்டளையானது தமிழக அரசு மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
23 இளங்கலை படிப்புகளும் 6 முதுகலை படிப்புகளும் வழங்கப்படுகின்றன