திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு..

Thiruvalluvar History in Tamil-ஈரடி குறளில் அனைத்தையும் ரத்தினச் சுருக்கமாக சொன்னவர் திருவள்ளுவர். உலகப் பொதுமறை தந்து தமிழர் பெருமையை உலகறியச் செய்தவர். அவரது வாழ்க்கையை சுருக்கமாக அறிந்து கொள்வோம்.

Update: 2022-06-04 15:30 GMT

Thiruvalluvar History in Tamil

Thiruvalluvar History in Tamil-தமிழ் நூல்களில் உன்னதப் படைப்பு, திருக்குறல். இரண்டு அடி குறளில் உலகை அளந்தவர் வள்ளுவர். எனவே தான் நாம் அவரை, 'தெய்வப்புலவர்', 'பொய்யில் புலவர்', 'நாயனார்', 'தேவர்', 'செந்நாப்போதர்', 'பெருநாவலர்', 'பொய்யாமொழிப் புலவர்' என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கிறோம்.

திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக 'உலகப் பொது மறை' என்கிறோம்.

திருவள்ளுவர் வாழ்ந்த காலம், 2 ஆம் நூறாண்டு முதல் 8 நூற்றாண்டு வரை இடைப்பட்ட காலம் என்று கருதப்படுகிறது. தமிழ் நாட்டில் மயிலாப்பூரில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

எனினும், வள்ளுவரின் பிறப்பு மற்றும் பிறப்பிடத்திற்கான சரியான சான்றுகள் இல்லை. மயிலாப்பூரில் அல்ல, மதுரையில் வள்ளுவர் பிறந்தார் என்றும் ஒரு தரப்பில் கூறப்படுவதுண்டு.

திருக்குறளானது, சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. மேலும், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் உள்ளது.

ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது 'ஈரடி நூல்' என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், 'முப்பால்' என்றும் அழைக்கப்படும் இந்நூல், மனிதர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News