மாணவர்களை ஆசிரியர் திட்டுவது, தண்டிப்பது குற்றமல்ல: பம்பாய் உயர் நீதிமன்றம்

மாணவரைத் திருத்துவதற்கு பள்ளி ஆசிரியர் திட்டுவது அல்லது நியாயமான தண்டனையை வழங்குவது குற்றமாகாது என்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கோவா கிளை கூறியுள்ளது.

Update: 2023-02-06 12:17 GMT

பம்பாய் உயர்நீதிமன்ற கோவா கிளை

"ஒரு ஆரம்பப் பள்ளியில் இந்த சம்பவம் மிகவும் சாதாரணமானது. மாணவர்களை ஒழுங்குபடுத்துவதற்கும், நல்ல பழக்கங்களை வளர்ப்பதற்கும், ஆசிரியர் அதற்கேற்ப செயல்பட வேண்டும், சில சமயங்களில் சற்று கடுமையாக நடந்து கொள்ள நேரிடும்" என்று உயர் நீதிமன்றத்தின் தனிநீதிபதி கூறியுள்ளார்.

2014ம் ஆண்டு பள்ளியில் ஐந்து மற்றும் எட்டு வயதுடைய இரு மாணவர்களில் ஒருவர் வகுப்புத் தோழியின் பாட்டிலில் இருந்து தண்ணீரைக் குடித்ததால், அந்த நேரத்தில் இரண்டு மாணவர்களை அடித்ததாக ஃபல்தேசாய் என்ற ஆசிரியை குற்றம் சாட்டப்பட்டார்.

ஐந்து வயது மாணவியின் மூத்த சகோதரரும், தனது சகோதரியை பார்க்க வந்தபோது ஆசிரியரால் 'அடிக்கப்பட்டதாக' கூறப்படுகிறது.

நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கோவா குழந்தைகள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆசிரியை ரேகா ஃபல்தேசாய் குற்றவாளி என அறிவித்தது. இபிகோ பிரிவு 324 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்) கீழ் தண்டனைக்குரிய குற்றத்திற்காக 2019ஆம் ஆண்டில் கோவா குழந்தைகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஆசிரியை ரேகா ஃபல்தேசாய் மேல் முறையீடு செய்திருந்தார்,

ஃபல்தேசாயின் வழக்கறிஞர் அருண் பிராஸ் டி சா வாதிடுகையில் , ஒரு ஆசிரியராக, தவறு செய்யும் அல்லது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காத மாணவரைத் திருத்தும் அதிகாரம் அவருக்கு உள்ளது என்று வாதிட்டார். மாணவர்கள் ஒழுக்கமான முறையில் செயல்படுவதை உறுதி செய்வது இபிகோ அல்லது கோவா குழந்தைகள் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாக கருத முடியாது, ஏனெனில் இதில் தவறு செய்யும் நோக்கம் எதுவும் இல்லை என்று கூறினார்

வழக்கு விசாரணை முடிவில் நீதிபதி தனது தீர்ப்பில், "மாணவர்கள் கற்பித்தல் நோக்கத்திற்காக மட்டுமல்லாமல், ஒழுக்கம் உள்ளிட்ட வாழ்க்கையின் பிற அம்சங்களைக் கற்றுக்கொள்வதற்காகவும் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். பள்ளியின் நோக்கம் கல்விப் பாடங்களைக் கற்பிப்பது மட்டுமல்ல, அத்தகைய மாணவர்களை வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தயார்படுத்துவது தான். அப்போது தான், எதிர்காலத்தில் அவர் நல்ல நடத்தை மற்றும் இயல்புடையவராக இருப்பார்,

ஒரு ஆரம்பப் பள்ளியில் இந்த சம்பவம் மிகவும் சாதாரணமானது. மாணவர்களை ஒழுங்குபடுத்துவதற்கும், நல்ல பழக்கங்களை வளர்ப்பதற்கும், ஆசிரியர் அதற்கேற்ப செயல்பட வேண்டும், சில சமயங்களில் சற்று கடுமையாக நடந்து கொள்ள நேரிடும்

ஆசிரியர் மாணவர்களை தடியால் அல்லது குச்சியால் தாக்கியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், இது தொடர்பான சாட்சிகளின் வாக்குமூலங்கள் முரண்படுவதாகவும், அதை உறுதியாக நிறுவ முடியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் குச்சியைப் பயன்படுத்துவதைப் பொருத்தவரை, அது போதுமான அளவு நிறுவப்படவில்லை. எனவே, குறிப்பிட்ட நாளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குச்சியை பயன்படுத்தினார். என்பதில்கடுமையான சந்தேகம் உள்ளது.

"ஆசிரியர்கள் சமூகத்தில் மிகவும் மதிக்கப்படுகிறார்கள். அவர்கள் நமது கல்வி முறையின் முதுகெலும்பு. நாகரிக சமுதாயத்திற்கு ஒரு நாகரீகமான இளம் தலைமுறை தேவை, அது ஒருவரையொருவர் மதிக்கும் மற்றும் தேசத்தின் எதிர்காலமாக கருதப்படும் என்று கூறினார்

Tags:    

Similar News