கற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு..
Study Motivation Quotes in Tamil-கல்வி என்பது வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் வேகாது என்ற விவேக சிந்தாமணி பாடலின்படி என்றும் அழியாத கல்வி செல்வத்தை பெற்றிடுங்கள்
Study Motivation Quotes in Tamil-ஊக்கம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒரு உந்துதலாக அமைகிறது. அந்த வகையில் கற்கும் மாணவர்களுக்கு கற்றல் செயல்பாட்டில் ஊக்கம் ஒரு மிக முக்கியமான காரணியாக உள்ளது. ஊக்கம் பெற்ற மாணவர், தனக்குள் இருக்கும் திறன்களை கண்டறியவும் மற்றும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் பெறுவார்.
குஞ்சியகுங் கொடுத்தானைக் கோட்டழகும்
மஞ்சளழகும் அழகல்ல _ நெஞ்சத்து
நல்லம் யாமென்னும் நடுவுநிலைமையால்
கல்வியழகே அழகு
பொருள்: கூந்தல் அழகும் ஆடை அலங்கார அழகும் மட்டுமல்லாமல் மஞ்சள் பூசிய முக அழகும் அழகு என்று நினைத்துவிடாதீர்கள். பல நூல்களை கற்றுப் பெற்ற கல்விதான் இவை எல்லாவற்றைவிடவும் அழகு என்கிறது நாலடியார்
அத்தகைய கல்வியை பெறுவதற்கு மாணவர்களின் வகுப்பறை ஈடுபாடு, மற்றும் கற்றலில் அவர்கள் பெறும் வெற்றிகள் ஆகியவற்றிற்கு பள்ளி மற்றும் பெற்றோர் கொடுக்கும் ஊக்கம் குறிப்பாக முக்கியமானதாக இருக்கலாம். ஊக்கம் எப்போதும் நேர்மறையாக இருக்க வேண்டும். இந்த பதிவில் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமையக்கூடிய சில மேற்கோள்கள்
தலை குனிந்து என்னை பார் தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கின்றேன் - புத்தகம்
ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்
நம்பிக்கை வெற்றியோடு வரும். ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்.
மனம் உங்களைக் கட்டுப்படுத்தும் முன் உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள்
நீங்கள் நிறுத்தாத வரை எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை.
தைரியம் பயத்தை விட ஒரு படி மேலே உள்ளது.
ஒழுக்கம் உண்டாக்காத இலக்கியக் கல்வியால் ஒருவித உபயோகமும் கிடையாது
கணிதம் சந்தோசத்தை கூட்டவோ கவலையைக் கழிக்கவோ நமக்குக் கற்றுத் தருவதில்லை... ஆனால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு என்பதை கற்றுத் தருகின்றது..!
புத்தகங்கள் இல்லையென்றால் சரித்திரம் மௌனமாகிவிடும். இலக்கியம் ஊமையாகிப்போகும். புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பது போல.
இடைவிடாமல் சிந்திக்கவும், உறுதியாக நிற்கவும் தகுதியுடையவனாகவுள்ள எவனொருவனும் தன்னையறியாமலேயே மேதையாகிவிடுகிறான்
சிந்திக்காமல் படித்தால் அந்தப் படிப்பு வீண், படிக்காமல் சிந்தித்தால் அந்த வாழ்க்கையே வீண்
வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு.. அதற்கு அவமானம் தெரியாது... விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்...
கல்வி மனிதனை எந்த பேதமில்லாமல் மனிதானகவே பார்க்க வைக்கும் அறிவு கண்கள்
கல்வி கற்காத பெற்றோர் இருந்த போது கல்வி கற்கும் பிள்ளைகள் உருவானார்கள்.
கல்வி கற்ற பெற்றோர் இருக்கையில் கல்வி கற்க விருப்பமற்ற மாணவர்கள் உருவாகியுள்ளனர்.
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்; பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் - மகாகவி பாரதியார்
ஒரு காலத்தில் சந்தோஷப் பறவைகளும் நட்பு பறவைகளும் குடியிருந்த நினைவுக்கூடு… பள்ளிக்கூடம்
வெகு அதிகமாகப் படித்து தன் மூளையையும் குறைவாக பயன்படுத்துபவன் சிந்தனை என்ற சோம்பேறித்தனத்திற்கு சென்றிடுவான்.
ஒரு பெண்ணுக்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கே கல்வி தருவதாகும் - கர்ம வீரர் காமராஜர்
கல்வி பெருமைக்காகத் தேடிப் பெறுவது அல்ல.. - பெற்றதைக் கொண்டு பெருமைத் தேடிக் கொள்வது..
வெறும் புத்தகங்களைப் படிப்பதால் மனிதன் வறட்சி அடைகிறான். படித்தவன் யார்? துளியளவாவது அன்பை உணர்பவனே படித்தவன்.
கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றிக் கனியை எட்டுபவனே சிறந்த சாமர்த்தியசாலி ஆகிறான்.
ஒரு மனிதன் தன்னை உலகிற்கு புத்திசாலி என்று நிரூபிப்பதை நிறுத்தும்போது வெற்றி பெறுகிறான்.
வெற்றிக்கான திறவுகோல் தடைகளில் அல்ல, இலக்குகளில் கவனம் செலுத்துவதாகும்.
தொடங்குவதற்கு நீங்கள் சிறந்தவராக இருக்க வேண்டியதில்லை, ஆனால் நீங்கள் சிறப்பாக இருக்க ஆரம்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய முன்னேற்றம் பெரிய முடிவுகளை சேர்க்கிறது
திறன் என்பது பலமணிநேர உழைப்பால் வேலைகளால் மட்டுமே உருவாக்கப்படுகிறது
தோல்வி அடைந்தவர்கள் சோர்வாக இருக்கும்போது வெளியேறுகிறார்கள். வெற்றியாளர்கள் வெற்றி பெற்றதும் வெளியேறுகிறார்கள்
உங்கள் செயலால் என்ன முடிவுகள் வரும் என்பதை நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள், ஆனால் நீங்கள் எதுவும் செய்யாவிட்டால் எந்த விளைவும் இருக்காது
நீங்கள் விரும்புவதை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், அது உங்களுக்கு ஒருபோதும் கிடைக்காது. நீங்கள் கேட்கவில்லை என்றால், பதில் எப்போதும் இல்லை. நீங்கள் முன்னேறவில்லை என்றால், நீங்கள் எப்போதும் ஒரே இடத்தில் இருப்பீர்கள்.
நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் நீங்கள் அறியாத ஒன்றை அறிவீர்கள்; அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
ஒரு கனவை அடைய முடியாத ஒரே ஒரு விஷயம் உள்ளது: தோல்வி பயம்
பட்டப்படிப்புக்குப் பிறகு என்ன செய்வது என்று தீர்மானிக்கப் போராடுவது உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான ஒரு வகையான சடங்கு, எப்போதும் இருக்கும்
உங்கள் கைகளை உங்கள் பைகளில் வைத்து வெற்றியின் ஏணியில் ஏற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2