தமிழகத்தில் 12 ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் தேதி அறிவிப்பு

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது;

Update: 2022-03-30 10:45 GMT

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதிக்குள் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

செய்முறை தேர்வு மதிப்பெண்களை பள்ளிகள் மே 4-ஆம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் மதிப்பெண் பட்டியலை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநரிடம் மே 14-ஆம் தேதி தரவேண்டும் எனவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. கடந்த பிப்ரவரி 1 முதல் தமிழகத்தில் அணைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், தேர்வுகளும் தொடங்கிவிட்டன. பொதுத் தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது.

அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் முதற்கட்ட திருப்புதல் தேர்வு நடந்து முடிந்தது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு நேற்று முன்தினம் முதல் தொடங்கிய நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் செய்முறை தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News