மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் கல்வெட்டியல் படிப்பு விரைவில் துவக்கம்

இதில் சேரும் மாணவர்களுக்கு, மாதம் 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்க, தொல்லியல்துறை முடிவு செய்துள்ளது.

Update: 2021-11-24 06:30 GMT

தமிழக தொல்லியல் துறை சார்பில் முதுநிலை தொல்லியல் துறை செயல்பட்டுவருகிறது. இந்தாண்டு முதல், முதுநிலை கல்வெட்டியல் துறை துவங்கி, இரண்டாண்டு கால, முதுநிலை கல்வெட்டியல் படிப்பும் கற்பிக்கப்பட உள்ளது.

இப்படிப்பில் சேர, தமிழ், வரலாறு, தொல்லியல் துறையில் முதுகலை படிப்பு முடித்திருக்க வேண்டும். இதில், தொல்லியல், பாரம்பரிய கட்டடக் கலை, கலைகள், நாணயவியல், கோவில் செப்பேடுகள், கல்வெட்டுகள் குறித்து பயிற்றுவிக்கப்படும். இதில் சேரும் மாணவர்களுக்கு, மாதம் 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்க, தொல்லியல்துறை முடிவு செய்துள்ளது.

Tags:    

Similar News