10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வினா வங்கி புத்தகங்கள் வெளியீடு
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வினா வங்கி புத்தகங்கள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான வினாவங்கி புத்தகங்களை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பல்வேறு இயக்ககங்களின் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான வினாவங்கி புத்தகங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
மேலும் பொதுமக்கள், மாணவர்கள் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த சான்றிதழ்களைப் பெறுவதற்கான அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையவழிச் சேவைகளையும் தொடங்கி வைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் முனைவர் அறிவொளி, மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலாளர் இரா.சுதன், பொது நூலகத் துறை இயக்குநர் திரு. இளம்பகவத், தொடக்கக் கல்வி இயக்குனர் தகண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அரசு தேர்வு எழுத இருப்பதால் அவர்களுக்கான வினா வங்கி புத்தகத்தை வெளியிட வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கை ஆகும். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அமைச்சர் அதனை வெளியிட்டு இருப்பது கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.