பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு இன்னும் 7 நாட்களே... மாணவ, மாணவிகளே தயாராகிவிட்டீர்களா? திட்டமிடுங்க....தன்னம்பிக்கையோடு.....
plus two exam- தமிழகம் முழுவதும் வரும் 13 ந்தேதி முதல் பிளஸ்2 எழுத்துத்தேர்வு துவங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டத்திலுள்ள பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
plus two exam
plus two exam
தமிழகத்தில் வரும் 13 ந்தேதி முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்டந்தோறும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
முன்பெல்லாம் பல மைல் துாரம் சென்று பொதுத்தேர்வு மையங்களில் தேர்வெழுதி வந்தனர். தற்போது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சீரிய நடவடிக்கையின் காரணமாக ஒரு சில பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே பிளஸ் 2 தேர்வுகளை கடந்த சில ஆண்டுகளாக எழுதி வருகின்றனர். இதனால் மாணவர்களின் அலைக்கழிப்பு, மனஉளைச்சல் தவிர்க்கப்பட்டு விட்டது என்றே சொல்லலாம்.
plus two exam
plus two exam
பயத்தைப் போக்கிடுவீர்...
இயல்பாகவே மாணவ, மாணவிகளுக்கு தேர்வு என்றாலே மனதில் ஒரு விதமான பயம் தொற்றிக்கொளும். நாம் படிக்கும் கேள்விகள் மட்டுந்தான் தேர்வில் கேட்பார்களா? இல்லை கேள்வித்தாள் எப்படி வரப்போகிறதோ? நாம் சரியாக அதனை எழுதிவிடுவோமா? என்று மனதில் ஆயிரம் குழப்பங்கள் எந்த தேர்வு எழுதுவோருக்கும் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். சரியாக திட்டமிட்டு படிக்கும் மாணவ, மாணவிகள் பயப்படவே கூடாது. எது வந்தாலும் மனப்பக்குவத்தோடு எதிர்கொண்டு தேர்வினை நல்லமுறையில் எழுதிவிடுவோம் என்ற தன்னம்பிக்கையானது ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் பயமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
plus two exam
plus two exam
சரியான திட்டமிடல் அவசியம்
ஒவ்வொரு மாணவ, மாணவியரும் அவர்களுக்கு உரிய பாடத்தினை தேர்வின் கால அட்டவணைக்கேற்றவாறு எப்படி படிப்பது? என்பது குறித்து நீங்களாகவே ஒரு மாடல் ஸ்டடி பிளான் ரெடி செய்துகொள்ளுங்கள். நிச்சயம் அதன்படி படித்தீர்களானால் உங்களுக்கு ரிவிஷன் செய்ய போதிய கால அவகாசம் கிடைக்கும்.
காலம்பொன் போன்றது
தேர்விற்கான கால அட்டவணையை அரசு கடந்த ஒருமாத காலத்திற்கு முன்பே அறிவித்துவிட்டது. தேர்வும் இன்னும் ஒருவாரத்திற்குள் நடக்க உள்ளது. இந்நிலையில் இருக்கும் இடைப்பட்ட நாட்களில் எந்தவிதமான பொழுதுபோக்கு அம்சத்திற்கும் இடம் கொடுக்காமல் படிப்பது, சாப்பிடுவது, ஓய்வெடுப்பது என சுழற்சிமுறையான வாழ்க்கையினை அனைவருமே பின்பற்றினீர்கள் என்றால் மட்டுமே உங்கள் தேர்வில் நீங்கள் நினைத்ததைச் சாதிக்க முடியும். உங்களைச் சுற்றி எது நடந்தாலும் அந்த விஷயங்களில் நீங்கள் கவனமே செலுத்தக்கூடாது. அதைவிடுத்து ஸ்மார்ட் போனைக் கையில் எடுத்தீர்களானால் நிச்சயம் உங்கள் நேரத்தினை விழுங்கிவிடும்.பார்த்துக்கோங்க. ஒரு மாதத்திற்கு செல்போனையே தொடாதீங்க. இவ்வுலகில் இழந்தது எதை வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுவிடலாம். ஆனால் கழிந்த நேரத்தினை நீங்கள் எந்த சூழ்நிலையிலும் திரும்ப பெற முடியாது. காலம்பொன்போன்றதுங்க...
plus two exam
plus two exam
துாக்கம் அவசியம்
ஒரு மனிதனுக்கு சராசரியாக 8மணி நேரதுாக்கம் என்பது அவசியம். தேர்வு காலத்தில் குறைந்தபட்சம் ஒரு ஆறு மணிநேரமாவது நீங்கள் ஓய்வெடுத்து நிம்மதியாக உறங்கினால்தான் உங்களுக்கு அடுத்த நாள் தேர்வினை ஒழுங்காக எழுத முடியும். அப்படி இல்லாமல் நான் ஃபுல்நைட் அடிக்கிறேன் என விடிய விடிய கண்விழித்து படித்தீர்களானால் உங்கள் உடம்பும் மனதும் சோர்வாகி விடும். தேர்வறையில் கண்கள் எரிச்சலுாட்டும். நிச்சயம் உங்களால் தேர்வு எழுதுவது சிரமமாகிவிடும். எனவே முடிந்தவரை தேர்வு நாட்களுக்கு முந்தைய நாள் இரவு 10 அல்லது 11 மணிக்கு உறங்கச் சென்றுவிடுங்கள். அதிகாலை 5மணி அளவில் எழுந்து படித்தீர்களானால் நிச்சயம் உடல் எந்த பிரச்னைகளையும் செய்யாது . எனவே நினைவில் கொள்ளுங்கள்.... இரவு முழுக்க அதிக நேரம் கண்விழித்து படிக்காதீர்கள்.
plus two exam
plus two exam
உணவுப்பழக்கம்
இந்த ஒரு மாத காலஅளவில் உங்கள் ஆரோக்யத்தைச் சரியான முறையில் பாதுகாப்பது மிக மிக அவசியம். இதற்கு பெற்றோர்களும் மிகுந்த உஷாராக அவர்களுக்கு தேவையான உணவுகளை செய்து தரவேண்டும். அதாவது எண்ணெயில் பொறித்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதேபோல் அதிக காரமும் வயிற்றுக்கு கேடு விளைவிக்கும். முடிந்த வரை எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிடுங்கள். தோசை, இட்லி ,சப்பாத்தி என்பது போன்ற டிபன் அயிட்டங்களை இரவில் சாப்பிடலாம். பரோட்டாவை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்... அதேபோல் பாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள் ...இவையெல்லாம் பல பக்க விளைவுகளைஏற்படுத்திவிடும். அதேபோல் கூல்டிரிங்க்ஸ், ஐஸ் போட்டபழச்சாறுகளையும் தவிர்த்துவிடுங்க. தினமும் ஒருஇளநீர் குடிப்பது உடலுக்கு தகுந்த ஆரோக்யத்தைக்கொடுக்கும். இரவில் படுக்கப்போகும் முன் ஒரு டம்ளர் பால் அருந்தலாம். பார்த்து சாப்பிடுங்க...தேர்வு முடியும் வரை....கண்டிப்பாக இந்த பத்திய சாப்பாடு சாப்பிட்டால் நிச்சயமாக உங்கள் ஆரோக்யத்துக்கு எந்த பிரச்னைகளும் வர வாய்ப்பில்லை.உஷாருங்க...பெற்றோர்கள் இந்த விஷயத்துல அக்கறை காட்டணும்....
plus two exam, remaining 7 days only
plus two exam
பெற்றோர்களுக்கு....
பெரும்பாலான பெற்றோர்கள் பிள்ளைகள் படிப்பது குறித்து கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பொதுவாகவே உள்ளது. ஆண்டு முழுவதும் கண்காணிக்காத பட்சத்தில் இந்த பொதுத்தேர்வு முடியும் வரை அவர்களை அருகில் இருந்து அவர்களுக்கு தேவையான உணவுகள், மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்க. அவர்கள் தனியறையில் படிப்பவர்களானால் இரவில் அவர்களுடன் ஒருவராவது இருங்க.அது அவர்களுக்கு ஒருவித பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் அவ்வளவுதான். அதிக நேரம் கண்விழித்துப் படிக்க அனுமதிக்காதீர்கள். நிச்சயம் இரவில் படிக்கும்போது ஒருவர் துணையிருந்தால் அவர்களுக்கும் துாக்கம் வராது. அவரவர்களின் வீட்டுவாழ்க்கை முறைக்கேற்ப இதனை அனைத்து பெற்றோர்களுமே கண்டிப்பாக அனுசரியுங்க.
மாணவ, மாணவிகளுக்கு...
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளே எந்த சூழ்நிலையிலும் உங்களுடைய தன்னம்பிக்கையினைத் தளர்த்திவிடாதீர்கள். எந்த கேள்வியையும் தேர்வில் எழுதாமல் விட்டுவிட்டு வராதீர்கள். அட்லீஸ்ட் வினா எண்ணைப் போட்டு அவ்வினா பற்றி உங்களுக்கு தெரிந்த பதிலை எழுதுங்கள். தேர்வு எழுதப்போகும் முன் நாம் படித்தது நம் நினைவிலேயே இல்லை என்பது போன்ற உணர்வு உங்களுக்கு வரலாம். அதனைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்...நிச்சயம் வினாத்தாளைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் பதிந்த அனைத்து விடைகளும் விடைத்தாளில் வந்து விழும்... ஆகவே யாருமே பயத்தை முதலில் தவிருங்கள்...
plus two exam
தேர்வு எழுத தயாராக தனித்தனி டேபிளில் அமர்ந்திருக்கும் மாணவிகள் (கோப்பு படம்)
plus two exam
தேர்வில் கவனிக்க வேண்டியவை....
- தேர்விற்கு முந்தைய நாளே நீங்கள் அணிந்து செல்லும் உடை, பேனா, பென்சில் , மற்றும் தேர்வுக்கான ஹால்டிக்கெட் போன்றவைகளை மறக்காமல் எடுத்துவைத்துவிடுங்கள்... இது டென்ஷனைக் குறைக்கும்..
- தேர்விற்கு செல்லும் காலை நேரத்தில் உங்கள் ஆரோக்யத்திற்கு தொந்தரவு தராத உணவுகளை சாப்பிட்டுசெல்லுங்க... தயவு செய்து சாப்பிடாமல் போயிடாதீங்க...
- தேர்வு துவங்குவதற்கு ஒரு அரைமணிநேரம் முன்னதாக உங்கள் மையத்தில் இருக்குமாறு செல்லுங்க இது மனப்பதட்டத்தைத் தவிர்க்கும்.
- வெயில் காலம் என்பதால் ஒரு பாட்டில் தண்ணீர் அவசியம் உடன் எடுத்து செல்லுங்க...இதற்கு அனுமதி அளிப்பார்கள்.
- தேர்வு துவங்கி வினாத்தாளை அளித்தவுடன் முதலில் அனைத்து பக்கங்களிலும் சரியாக பிரிண்ட் ஆகி உள்ளதா? அந்த வினாத்தாள் உங்களுடைய பாடந்தானா? என்பதை உறுதி செய்யுங்க...
- மணி அடித்தவுடன் முதலில் உங்களுடைய தேர்வு எண்ணை சரியாக எழுதிவிடுங்கள். அதேபோல் தேர்வு துவங்கியவுடன் முதலில் உங்களுக்கு நன்றாக தெரியக்கூடிய வினாக்களுக்கு அதனுடைய சரியான வினாஎண்ணை பதிவிட்டு எழுத துவங்குங்கள்.
- தெரியாத வினா அல்லது யோசித்துதான் எழுதவேண்டும் என்ற வினா வந்திருக்கும் பட்சத்தில் அதனைக் கடைசிநேரத்தில் எழுதும்படி திட்டமிட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
plus two exam
plus two exam
- வினாத்தாளில் உங்களுக்கான சாய்ஸ் கொடுக்கப்பட்டிருந்தால் கொடுக்கப்பட்டுள்ள சாய்ஸ்க்கு தகுந்த கேள்விகளுக்கு மட்டும் விடையளியுங்கள்.கூடுதலாகவே குறைவாகவோ எழுத வேண்டாம்.
- படம் வரைந்து பதிலளிக்கவேண்டிய வினாக்களுக்கு உரிய படத்தினை அழகாக வரைந்து பாகத்தினைத்தெளிவாக எழுதுங்கள்..
- முடிந்தவரை வினாத்தாளில் அடித்தல், திருத்தல், இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்...
- வினாத்தாளில் தெளிவான கையெழுத்தில் எழுத முயற்சியுங்கள்...
மேற்கண்ட அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி பொதுத்தேர்வினை எழுதும் மாணவர்கள் நிச்சயம் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கையோடு தேர்வினைச் சந்தியுங்கள். நிச்சயம் வெற்றிதான். பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் (Instanews)இன்ஸ்டாநியூஸ் செய்தித்தளத்தின் சார்பில் வாழ்த்துகள்.