இன்று தொடங்குகிறது பிளஸ் 1 தேர்வு: 3,119 மையங்களில் ஏற்பாடுகள் தயார்

தமிழகத்தில் பிளஸ் 1 பொத்தேர்வு இன்று தொடங்கி, வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

Update: 2022-05-10 01:30 GMT

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளிகளில் பொதுத்தேர்வு நடைபெறவில்லை. இந்த கல்வியாண்டில் கொரோனா தாக்கம் குறைந்ததால், வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டு, பாடங்கள் தாமதமாக நடத்தப்பட்டு வந்தன.

இதனால், வழக்கத்துக்கு மாறாக இவ்வாண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மே மாதத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 6ம் தேதியும் துவங்கி நடைபெற்று வருகிறது.

இச்சூழலில், தமிழகத்தில் இன்று பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. மே 31ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தேர்வினை, 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள். இவர்களில் 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 பேர் மாணவிகள் ஆவர். தேர்வெழுத 3,119 மையங்களில் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

Tags:    

Similar News