வே. தில்லைநாயகம்( வேதி) தமிழகத்தின் முதல் லைப்ரேரியன்

Update: 2021-06-10 05:49 GMT

வே. தில்லைநாயகம்( வேதி)

வே. தில்லைநாயகம்( வேதி) தமிழகத்தின் முதல் லைப்ரேரியன்-இவரது குறிப்பேடு என்னும் நூல்தான் தமிழில் வெளிவந்த முதல் இயர் புக் - அதாவ்து ஆண்டு நூல்!

மாணவப் பருவத்திலேயே நூலகத் தொடர்பு பெற்றவர். இவரின் லைப்ரரி ஆர்வத்தை பார்த்த தமிழக அரசு தன் சொந்த நூலகப் பயிற்சி பெறச்செய்து பொதுக்கல்வித் துறை இயக்க முதல் நூலகர் பொறுப்பில் நியமித்தது பின்னர். 1962ஆம் ஆண்டில் கன்னிமாரா பொதுநூலகத்தில் இன்சார்ஜ் ஆனார்.

1972 ஆம் ஆண்டில் தமிழக அரசு பொதுநூலகத் துறையின் முதல் இயக்குநராக உயர்ந்து 1982 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். விடுதலை பெற்ற இந்தியாவில் ஒரே துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் இயக்குநராக இருந்தவர் இவர் ஒருவரே ஆவார். தேசிய, மாநில பல்கலைக்கழக நூலக குழுகள் பலவற்றில் உறுப்பினர். நூலக இயக்கத்தின் பண்பும், பயனும் என்றும் இல்லாத அளவு உயர்ந்த வீச்சினைப் பெற்ற இவரது ஆட்சிக்காலம்,

தமிழக நூலக இயக்கத்தின் பொற்காலம் என்று நூல்சார்ந்த எல்லோரும் இவரைப் புகழ்ந்துள்ளார்கள். எனவேதான் இந்திய நூலகத்துறை முன்னோடி அரங்கநாதனின் ஏகலைவ மாணவரான இவரை தமிழக பொதுநூலக இயக்கத்தின் தந்தை எனப் புகழப்படுகிறார். இது போல் மேலும் பல் பெருமைகள் படைத்த வேதிக்கு இன்று பிறந்த நாள்!

Similar News