நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்காக அவகாசம், மே 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.;
இந்தியாவில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர, நீட் தகுதித் தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வு, தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் வருகிற ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ளது.
நீட் தேர்வுக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கியது. நேற்று வஇளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்காக அவகாசம், மே 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, முதலில் மே 6ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டிருந்தது. பின்னர், நேற்று (மே 15) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கு மே 20 ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. http://neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் கூடுதல் தகவல்களை https://nta.ac.in என்ற வலைதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.