எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கு ஜூலை 17ல் நீட் தேர்வு!
எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ளது.;
இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு, நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாகும். இந்த நிலையில், நடப்பாண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இத்தேர்வு, தமிழ் இந்தி உள்பட 17 மொழிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான ஆன் லைன் பதிவு, நாளை மறு நாள் தொடங்குகிறது. மே 7ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். கடந்தாண்டு 16.4, லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இம்முறை 20 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.