வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: அறிவியல் தொழில்நுட்ப பாடங்களுக்கு முன்னுரிமை

மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

Update: 2022-03-30 02:58 GMT

பட்டியல் பிரிவு மாணவர்களுக்கான தேசிய வெளிநாட்டு கல்வி உதவித் தொகை திட்டத்தை ஒழுங்குப்படுத்திய புதிய வழிகாட்டுதல்களின்படி மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும் இந்திய பல்கலைக்கழகங்கள் வலுவாக உள்ள துறைகள் மற்றும் இந்தியாவில் களப்பணி செய்யக்கூடிய துறைகளில் ஆராய்ச்சிக்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு மற்றும் சமூக படிப்புகளுக்கு 2022-23-ம் ஆண்டு முதல் உதவித்தொகை வழங்கப்படமாட்டாது.

அதேசமயம், இதர மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் படிப்புகளான சட்டம், பொருளாதாரம், மனநலம் உள்ளிட்டவற்றுக்கு நிதி உதவி வழங்கப்படும். இதன் காரணமாக பட்டியல் பிரிவை சேர்ந்த ஏழை மாணவர்கள் வெளிநாட்டில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளது, என சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் ஏ நாராயணசாமி மக்களவையில்  தெரிவித்துள்ளளார். 

Tags:    

Similar News