மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி : நீட் தேர்வு எழுதும் நேரம் 20 நிமிடம் அதிகரிப்பு

நீட் தேர்வு நேரம் 3 மணி 20 நிமிடங்கள் என்று தேசிய தேர்வு முகமை நிர்ணயம் செய்துள்ளது;

Update: 2022-04-07 03:15 GMT

நீட் தேர்வு நடைபெறும் நேரம் 3 மணி 20 நிமிடங்களாக அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 மணி நேரம் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில் 2022-ம் ஆண்டுக்கான தேர்வு நேரம் 3 மணி 20 நிமிடங்கள் என்று நிர்ணயம் செய்துள்ளது. 200 கேள்விகளுக்கு, 200 நிமிடங்கள் என்ற அடிப்படையில் நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் (neet.nta.nic.in) சென்று மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். நாடு முழுவதும் தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் போது மொழியை தேர்வு செய்ய வேண்டும்.

நீட் தேர்வுகள் ஓ.எம்.ஆர். தாள்கள் மூலம் நடத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும் என்றும் தேர்வு எழுதுவதற்கான நேரம் 200 நிமிடங்களாக(3 மணி நேரம் 20 நிமிடங்கள்) அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் 3 மணி நேரம் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 20 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags:    

Similar News