Mei Eluthukkal in Tamil-தமிழில் மெய்யெழுத்துக்கள் என்பவை யாவை? அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

Mei Eluthukkal in Tamil-மெய்யெழுத்துக்கள் உயிர் எழுத்துக்களுடன் சேர்ந்தே இயங்கும். மெய்யெழுத்துக்கள் வார்த்தையின் முதல் எழுத்தாக வராது என்கிறது இலக்கணம்

Update: 2022-12-10 09:22 GMT

Mei Eluthukkal in Tamil-தமிழில் உயிர் எழுத்துக்கள் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவு மெய் எழுத்துக்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமிழ் மொழிக்கு உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் அடிப்படையான எழுத்துக்கள். க் முதல் ன் வரை உள்ள 18 எழுத்துக்களும் மெய் எழுத்துக்கள் ஆகும்.

மெய் எழுத்துக்களை ஒலிப்பது சற்று கடினம். மெய்யெழுத்துக்களில் சில எழுத்துக்கள் ஒரே ஒலி வருவது போல இருக்கும். ஆனால் அவற்றின் ஒலி மாறுபாடு இருக்கும், உச்சரிக்கும் போது கவனமாக உச்சரிக்க வேண்டும்.

மெய்யெழுத்துக்கள் உயிர் எழுத்துக்களுடன் சேர்ந்தே இயங்கும். மெய்யெழுத்துக்களை ஒற்றெழுத்துக்கள் என்றும் புள்ளி எழுத்துக்கள் என்றும் கூறுவர்.

உயிர் எழுத்துக்களில் இருக்கும் குறில் நெடில் வேறுபாடு மெய் எழுத்துக்களில் இருக்காது.

மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். அவை

  • வல்லினம்
  • மெல்லினம்
  • இடையினம்

வல்லினம்

மெய் எழுத்துக்களில் வன்மையாக ஒலிக்கும் எழுத்துக்களை வல்லின எழுத்துக்கள் என்று கூறுவர்.

க், ச், ட், த், ப், ற்

இந்த ஆறு மெய் எழுத்துக்களும் வல்லின எழுத்துகள் ஆகும்


மெல்லினம்

மெய் எழுத்துக்களில் மென்மையாக ஒலிக்கும் எழுத்துக்களை மெல்லின எழுத்துக்கள் என்று கூறுவர்.

ங், ஞ், ண், ந், ம், ன்

ஆகிய ஆறு மெய்யெழுத்துக்களும் மென்மையாக ஒலிப்பதால் மெல்லின எழுத்துகள் ஆகும்.


இடையினம்

மெய் எழுத்துக்களில் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிக்கும் எழுத்துக்களை இடையின எழுத்துக்கள் என்று கூறுவர்.

ய், ர், ல், வ், ழ், ள்

ஆகிய ஆறு மெய் எழுத்துக்களும் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிப்பதால் இடையின எழுத்துகள் ஆகும்

நெஞ்சிலிருந்து வரும் காற்று வாய்ப்பகுதியில் தற்காலிகமாகத் தடைப்பட்டு வெளியேறும்போது மெய்யொலிகள் உருவாகின்றன.

தமிழ் இலக்கணப்படி, தனிமெய்யெழுத்துகள் மொழிமுன் வாரா. அதாவது வார்த்தையின் முதல் எழுத்தாக இருக்காது. ஆயினும், தற்காலத்தில் பிறமொழிச் சொற்களை எழுதும்போது தனிமெய்யெழுத்துகள் மொழிமுதலில் வருமாறும் இவ்விலக்கணத்தை மீறி எழுதுவதுண்டு. உதாரணம்: த்ரிஷா, 



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News