JKKN கலை,அறிவியல் கல்லூரியில் கணிதக்கழக தொடக்க விழா
குமாரபாளையம் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதக் கழகத் தொடக்க விழா நடைபெற்றது;
குமாரபாளையம் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 20ம் தேதி புதன் கிழமையன்று காலை 11 மணிக்கு கணிதக் கழகத் தொடக்க விழா பி.காம் மூன்றாம் ஆண்டு வகுப்பறையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) டாக்டர். C. சீரங்கநாயகி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த பேராசிரியை டாக்டர் திலகவதி கலந்து கொண்டு, "வரைபடக் கோட்பாட்டின் பயன்பாடுகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
முன்னதாக இளம் அறிவியல் மூன்றாமாண்டு கணித மாணவி சப்திகா அனைவரையும் வரவேற்றார். மூன்றாமாண்டு கணித மாணவி சௌந்தர்யா நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணித கழகத்தின் துணைத்தலைவர் பேராசிரியை டாக்டர். சாந்தி செய்திருந்தார்.