எல்கே.ஜி, யுகேஜி வகுப்புகள் மூடலா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழக அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படவில்லை என்று, பள்ளிக் கல்வி துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2022-06-07 14:30 GMT

தமிழகத்தில் பள்ளிக் கல்வி துறை மூலம், எல்கேஜி, யூகேஜி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், தமிழகம் முழுவதும் 2,381 எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

இதனிடையே, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், தமிழ்நாட்டில் அரசு சார்பில் நடத்தப்பட்டு வந்த எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எல்.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அங்கன்வாடி மையங்களிலேயே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படும். அரசுப்பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பெற்றோர், தங்கள் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்கலாம். எனினும், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் 1-5ஆம் வகுப்புகளுக்கு மாற்றப்படுவர் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News