கல்விக்கண் திறந்த கர்மவீரரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..
Kamarajar History in Tamil-இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதமர்களை உருவாக்கி, இந்தியாவின் ‘கிங்மேக்கராகப்’ போற்றப்படும் காமராஜரின் வாழ்க்கை வரலாறு.;
Kamarajar History in Tamil
Kamarajar History in Tamil
காமராஜர் தமிழகத்தின் விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மை என்ற தம்பதிக்கு 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி மகனாய் பிறந்தார். தனது தொடக்க பள்ளி படிப்பை தனது சொந்த ஊரான விருதுநகரில் சத்திரிய வித்யா சாலா என்ற பள்ளியில் பயின்றார். காமராஜர் படிக்கும் போது இருந்தே அவருக்கு விட்டுக்கொடுக்கும் பண்பு மற்றும் அமைதியாக எல்லோருடனும் பேசும் பண்பு போன்ற நல்ல குணங்களை தன்னுள் வைத்திருந்தார்.
பள்ளி படிப்பினை துவங்கிய சிறிது காலத்தில் அவரது தந்தை இறந்து விட்டதால் அவரால் தொடந்து படிக்கமுடியவில்லை. குடும்ப சூழல் காரணமாக தனது படிப்பினை துறந்து அவரது மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். துணிக்கடையில் வேலை செய்யும் பல தலைவர்கள் பேசுவதை கேட்டு அவர்களது போராட்ட குணத்தால் ஈர்க்கப்பட்டு 1920ஆம் ஆண்டு தனது 16ஆவது வயதில் காங்கிரஸ் கட்சில் தன்னை இணைத்துக்கொண்டார். அன்றுமுதல் அவர் மக்களுக்காக அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் எண்று தனது மனதிற்குள் கணக்கு போடு அதன்படி நடக்க ஆரம்பித்தார் .
முதன் முதலில் 1930ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாகிரக போராட்டம் தமிழகத்தில் நடந்தது . அதில் பங்கேற்று நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டு கல்கத்தாவில் உள்ள அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு ஒரு வருட தண்டனைக்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.
மீண்டும் 1940 விருதுநகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி கைதாகி வேலூர் சிறை சென்றார். சிறையில் இருந்தவாறே விருதுநகர் நகரத்தின் நகராட்சி தலைவர் போட்டியில் நின்று வெற்றி பெற்றார் . மீண்டும் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் புரட்சி இயக்கத்தில் கலந்து கொண்டமையால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் சத்தியமூர்த்தியின் மேல் இருந்த மதிப்பின் காரணமாக அவரை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார் . சத்தியமூர்த்தி காங்கிரஸ் தலைவரான போது காமராஜரை செயலாளராக நியமித்தார். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, சத்திய மூர்த்தி அவர்கள் இறந்துவிட்டார், ஆனால் காமராஜர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் சத்திய மூர்த்தி வீட்டிற்குச் சென்று தேசியக்கொடியை ஏற்றினார். அதுமட்டுமல்லாமல், காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன், சத்திய மூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி, தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.
தமிழகத்திற்கு அவர் பல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்தார் . அதில் முக்கியமான சிலவற்றை கீழே தொகுத்துள்ளோம்.
நெய்வேலி நிலக்கரித் திட்டம்
பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை
திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்
கல்பாக்கம் அணு மின்நிலையம்
ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை
கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
சேலம் இரும்பு உருக்கு ஆலை
நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை என மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன.
மேலும் மின்சாரம் மற்றும் நீர்வளதுறைகள் மீதும் நாட்டம் கொண்டிருந்த அவர் அந்தத் துறையிலும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.
மேட்டூர் கால்வாய்த் திட்டம்
பவானி திட்டம்
காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்
மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்பாசன திட்டங்களையும்' ஏற்படுத்தினார்.
காமராஜர் தனது 59வது வயதில், தான் ஓய்வு பெறும் நிலையில் இருப்பதை உணர்ந்து, ஒரு திட்டத்தை வரைந்து அதற்கு கே-பிளான் (காமராஜர் திட்டம்) என்று பெயரிட்டார். மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சி மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு தங்கள் அனுபவத்தை அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். காமராஜரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, எஸ்.கே.பாட்டீல், பிஜு பட்நாயக், ஜகஜீவன் ராம், மொரார்ஜி தேசாய் ஆகிய ஐந்து முதல்வர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து இளம் தலைவர்களுக்கு வழிகாட்டி கட்சியின் வளர்ச்சிக்காக அவர்களை அர்ப்பணித்தனர்.
அதே ஆண்டு அவர் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ஆனார். அவர் சொன்னால் இந்திய தேசத்தின் பிரதமரே நியமிக்கப்படும் அளவிற்கு அவரின் செல்வாக்கு கட்சியின் மத்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
1966 இல் நேரு இறந்த பிறகு, அவர் பிரதமராக மறுத்து, இரண்டு சக்திவாய்ந்த பிரதமர்களை 1964 இல் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் 1966 இல் இந்திரா காந்தி அறிமுகப்படுத்தினார்.
வாழ்நாளில் பல உதவிகளை மக்களுக்காக செய்த மக்கள் தலைவன் காமராஜர் அவர்கள், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார்.
ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தும் சாகும் வரை அவர் வாடகை வீட்டிலேயே வசித்தார். காமராஜரின் மறைவின்போது அவரிடம் வங்கிக் கணக்கில் 150 ரூபாய், இரண்டு செட் துணி, மட்டுமே இருந்தது
சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2