கல்லணையின் வரலாறு
Kallanai Dam History in Tamil-பண்டைய தமிழர்களின் பெருமையை, கட்டுமானத்திறனை இன்றும் உலகிற்கு பறைசாற்றுவது, உலகப் பழமை வாய்ந்த கல்லணை. அதன் வரலாற்றை சுருக்கமாக காண்போம்.;
Kallanai Dam History in Tamil-தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லணை. இதனை ஆங்கிலத்தில் , Grand Anicut என்பர். கல்லணையானது, கரிகால் சோழனால் 1-ஆம் நூற்றாண்டில் காவிரி மீது கட்டப்பட்டுள்ளது.
கல்லணையின் நீளம் 1080 அடி; அதன் அகலம் 66 அடி. அணையின் உயரம் 18 அடியாகும். கல்லும் களி மண்ணும் மட்டுமே சேர்ந்த ஒரு அணை, 1900 ஆண்டுகளுக்கு மேலாக, பெரிய ஆறான காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது உண்மையில் மிகப்பெரிய ஆச்சரியமூட்டும் ஒன்று.
உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படும் கல்லணை, மணலில் அடித்தளம் அமைத்து கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை, உலக பொறியாளர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இந்த அணையை 1853ல் பார்த்த பிரிட்டிஷ் இன்ஜினியர் பெயர்டு ஸ்மித் என்பவர் 'கல்லணை ஒரு பொறியியல் சாதனை' என தன் வியப்பை பதிவு செய்துள்ளார்.
இன்றும் தென்னிந்திய அணைக்கட்டுகளின் தந்தை என போற்றப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற பிரிட்டிஷ் இன்ஜினியர் 'தி கிராண்ட் அணைக்கட்' என தன் வியப்பை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2