Kadai Elu Vallalgal Names in Tamil-கடையெழு வள்ளல்கள் பெயர்கள்..
Kadai Elu Vallalgal Names in Tamil-கடையெழு வள்ளல்களை பற்றி தமிழ்ப் பாடங்களில் படித்திருப்போம். அவர்களை பற்றிய சுருக்கமாக இங்கே நினைவு கூறுவோம்.
Kadai Elu Vallalgal Names in Tamil
சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார். அவர்களின் விவரம்:
பேகன் - மயிலுக்குப் போர்வை அளித்தவன் (பொதினி -பழனி)
பாரி - முல்லைக்குத் தேர் தந்தவன் (பறம்பு மலை)
காரி - (திருக்கோவிலூர்) ஈர நன்மொழி கூறியவன்
ஆய் - நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்தவன் (பொதிகை மலை)
அதியமான் - நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்தவன் (தர்மபுரி)
நள்ளி - துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன். நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன். நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கியவன்
ஓரி -(கொல்லிமலை) தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். தன் ஓரி என்னும் குதிரைமீதேறி, காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவன்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2