தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறப்பது எப்போது தெரியுமா ?
11ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வரும் நிலையில் ஜூலை மாதம் முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் புதிதாக சேர்ந்துள்ள 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் வரும் ஜூலை மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா 2ம் இரண்டாம் அலை மிக அதிகமாக பரவி வந்தது. இதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதே போல் பள்ளி, கல்லூரிகள் ஆகியவை திறக்கப்படாமல் இருந்து வந்தது. ஆனால், மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. கடந்த 1 ஆண்டாக மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வாயிலாக பாடங்களை கற்று வந்தனர்.
கொரோனா பரவல் சூழலின் காரணமாக 10 ஆம் மற்றும் 11 ஆம் மாணவர்களின் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனையின் பெயரில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இருந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இப்படியான நிலையில், இந்த கல்வி ஆண்டு துவங்கியுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவங்க உள்ளது. அதே போல் தமிழகத்தில் பள்ளிகள் வரும் ஜூலை மாதம் முதல் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.