ஐசிஎஸ்இ வாரியம் - மாணவர்களுக்கான இறுதி மதிப்பெண் முடிவு இன்று வெளியீடு

ஐசிஎஸ்இ வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி மதிப்பெண் முடிவுகளை வலைத்தளத்தில் இன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளது.;

Update: 2021-07-24 08:09 GMT

ஐசிஎஸ்இ வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி மதிப்பெண் முடிவுகளை இன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இன்று மாலை 3 மணிக்கு ஐசிஎஸ்இ https://www.cisce.org வலைத்தளத்தில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதுடன் மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்த செல்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைப்போல் ஐசிஎஸ்இ இணையதளத்தில் லாகின் செய்து தேர்வு முடிவு விவரங்கள் மற்றும் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் விடைத்தாள் மறு மதிப்பீடு செய்வதற்கான வாய்ப்பு இம்முறை இல்லை என்றும் மதிப்பெண் கூட்டலில் எழும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் கூட்டலில் சந்தேகம் தெரிவிக்கும் மாணவர்கள் அதுதொடர்பாக எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தை பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி அவர்கள் கோரிக்கை சரி பார்த்தபின்பு உரிய ஆவணங்களுடன் ஐசிஎஸ்இ வாரியத்திற்கு மாணவர்களின் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படும். இதைத்தொடர்ந்து ஐசிஎஸ்இ வாரியம் இதுகுறித்த முழுமையான ஆய்வினை மேற்கொண்டு சம்பந்தபட்ட பள்ளிக்கு அதன் முடிவை அறிவிப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News