நோய் எதிப்பு சக்தி திறன் அதிகம்-தொடக்க பள்ளிகளை திறக்கலாம்-ஐ.சி.எம்.ஆர்

குழந்தைகளுக்கு நோய் எதிப்பு சக்தி திறன் அதிகமாக இருப்பதால் தொடக்க பள்ளிகளை திறப்பது குறித்து பரீசிலிக்கலாம் என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-21 02:36 GMT

குழந்தைகளுக்குநோய் எதிப்பு சக்தி திறன் அதிகமாக இருப்பதால் தொடக்க பள்ளிகளை திறப்பது குறித்து பரீசிலிக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. இருப்பினும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று சுகாதார அமைச்சக மாநாட்டில் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

பெரியவர்களை விட குழந்தைகள் வைரஸ் தொற்றுநோய்களைக் கையாள முடியும் என்பதை நாங்கள் தெளிவாக அறிவோம். ஆன்டிபயாட்டிக் வெளிப்பாடு பெரியவர்களைப் போலவே குழந்தைகளிடமும் ஒத்திருக்கிறது. சில நாடுகள் தங்கள் ஆரம்ப பள்ளிகளை எந்த கொரோனா அலைகளிலும் மூடவில்லை என்று ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் டாக்டர் பால்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

ஐ.சி.எம்.ஆர் ஜூன்-ஜூலை மாதங்களில் சமீபத்திய கணக்கெடுப்பை நடத்தியது. பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய ஒரு மூத்த அதிகாரி, ''6 வயதுக்கு மேற்பட்ட இந்தியாவின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு அல்லது 67.6 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தித்திறன்(ஆன்டிபயாட்டிக் ) கொண்டிருப்பது தெரியவந்தது'' என்றார்.

அதே வேளையில் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தித்திறன் இல்லை, அதாவது சுமார் 40 கோடி மக்கள் இன்னும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். கணக்கெடுக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களில் 85 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தித்திறன் கொண்டிருந்தனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் இதில் மனநிறைவுக்கு இடமில்லை, பொருத்தமான கொரோனா நடத்தை விதிகளை பின்பற்றப்பட வேண்டும். சமூக, மத மற்றும் அரசியல் கூட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும். , அத்தியாவசியமற்ற பயணங்களை ஊக்கப்படுத்த வேண்டும். முழுமையாக தடுப்பூசி போட்டால் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும் ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்தி இருக்கிறது.


Tags:    

Similar News