கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் பெண்களுக்கு கூகுள் வழங்கும் உதவித்தொகை

கூகுள் வழங்கும் உதவித்தொகை Generation Google Scholarship விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர்10. பெறுவது எப்படி?

Update: 2021-12-08 17:24 GMT

கோப்பு படம்

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் (Google) கம்ப்யூட்டர் சயின்ஸ் (Computer Science) படிக்கும் பெண்களுக்காக 'ஜெனரேஷன் கூகுள் ஸ்காலர்ஷிப்' (Generation Google Scholarship) எனும் உதவித்தொகை திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. கணினி அறிவியல் பயிலும் மாணவிகளின் கல்வி தேவையை பூர்த்தி செய்ய இந்த திட்டத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. 'ஜெனரேஷன் கூகுள் ஸ்காலர்ஷிப்'-க்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 10 ஆகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் சுமார் ரூ.74,000 வரை உதவித்தொகை பெறலாம். இந்த தொகை குறிப்பாக டியூசன், கல்வி கட்டணம், புத்தகங்கள், பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். கூகுள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் மற்றும் மாணவிகள் தங்கள் விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலம் விரைவில் சமர்ப்பிக்கவும். ஏனெனில், கூகுள் ஸ்காலர்ஷிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 10 ஆகும்.

கணினி அறிவியல், கணினி பொறியியல் அல்லது கணினி தொடர்புடைய தொழில்நுட்பத் துறையை சேர்ந்த மாணவியாக இருக்க வேண்டும். பெண்களின் கல்விப் பதிவு வலுவாக இருக்க வேண்டும். பெண்கள் தொழில்நுட்பம் அல்லது கணினி அறிவியல் தொடர்பான படிப்பைத் தொடர வேண்டும்.

கூகுள் ஸ்காலர்ஷிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பதாரர் இதற்காக ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

இதற்காக விண்ணப்பதாரர் buildyourfuture.withgoogle.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிட வேண்டும்.


அதில் கூகுள் ஸ்காலர்ஷிப்+ என்ற பகுதியை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்.



 அதில், Generation Google Scholarship என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.




 இப்போது நீங்கள் உதவித்தொகை தொடர்பான தகவல்களைப் பெறுவீர்கள். அதில் இடது பக்கத்தில் கீழே Apply என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.


பின்னர் தேவையான தகவலை உள்ளிடவும். அதன் பிறகு, படிவத்தை சமர்ப்பிக்கவும். இத்துடன் கூகுள் ஸ்காலர்ஷிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்முறை முடிந்தது. விண்ணப்பிப்பதற்குமுன் தேவையான ஆவணங்களை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.

Tags:    

Similar News