தமிழகத்தில் உள்ள 143 கல்லூரிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது என கல்லூரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Update: 2021-07-25 12:20 GMT

தமிழகத்தில் நாளை முதல் தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது. www.tngasa.org, www.tngasa.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என கல்லூரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 143 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. www.tngasa.org, www.tngasa.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என கல்லூரி கல்வித்துறை அறிவித்துள்ளது. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation centre-AFC) மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பதிவுக் கட்டணம் மட்டும் ரூபாய் 2 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்கள் விண்ணப்பக் கட்டணமாக 48 ரூபாயும் பதிவு கட்டணமாக ரூபாய் 2ம் செலுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

நாளை துவங்கி வருகின்ற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தை இணைய வாயிலாக செலுத்த இயலாத மாணவர்கள் To,The director directorate of collegiate education chennai-6 என்கிற முகவரிக்கு டி.டி எடுத்து அனுப்பலாம் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

https://t.co/TPJH3ICezx,https://t.co/rNVx2bggH0 என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.



 


Tags:    

Similar News