கோவை வேளாண் பல்கலையில் இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க அக்-18 வரை தேதி நீட்டிப்பு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு அக். 18 வரை விண்ணப்பபிக்கலாம்.;

Update: 2021-10-07 03:59 GMT

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பபிக்க அக். 18 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணவர் சேர்க்கை தலைவர் மா.கல்யாணசுந்தரம் கூறியிருப்பது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 18 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் மூலம் 12 இளநிலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. நடப்பு ஆண்டில் (2021-2022) இளநிலை பட்டப் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த செப். 8ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில், இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசித் தேதியை நீட்டிக்க வேண்டும் என பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, இணையதளம் மூலம் விண்ணப்பத்தைப் பதிவேற்றுவதற்கான கடைசித் தேதி அக். 7 ல் இருந்து அக். 18 ஆக நீட்டிக்கப்படுகிறது. தொடர்ந்து, தரவரிசை பட்டியல் நவ. 2இல் வெளியிடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News