ஒழுங்கீனமான மாணவர்களை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மாணவர்களின் ஒழுங்கீனத்தை தடுக்க பள்ளிகள் தோறும் கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டுமென்று, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-03-21 05:45 GMT

அரசு பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் ஒருசில மாணவர்களால் சட்டம் ஒழுஙகு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுவதோடு, பிரச்சை செய்யும் மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கபப்டுகிறது.

இதனை தவிர்க்கும் நோக்கில், பள்ளி தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்ச்சைக்குரிய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் வாயிலாக உரிய ஆலோசனை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பள்ளிக் கல்வித் துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News