புதிய ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் பணி மாறுதல் இல்லை ஏன் என தெரியுமா?
புதிதாக பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் பணி மாறுதல் எதற்காக இல்லை என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இடமாற்றமில்லை; வரும் காலங்களில் 5 ஆண்டுகள் ஒரே இடத்தில் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
புதிய ஆசிரியர்கள் பணி நியமனத்தில் பல்வேறு மாற்றங்களை செய்வதாக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. வடதமிழக மாவட்டங்களில் ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
பணி நியமனம் தொடர்பாக ஏற்கனவே அரசு வெளியிட்டு இருந்த அறிக்கையில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40-லிருந்து 45-ஆகவும், இதரப் பிரிவினருக்கு 45-லிருந்து 50-ஆகவும் சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் உயர்த்தியும், இந்த உச்ச வயது வரம்பு 31.12.2022 வரை வெளியிடப்படும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு பொருந்தும் எனவும், மேலே ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட மனிதவள மேலாண்மை(எஸ்)த் துறையின் அரசாணையின்படி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை, 01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும், இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயம் செய்தும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 45 எனவும், இதர பிரிவினருக்கு 50 எனவும் ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி ஒருமுறை மட்டும் உயர்த்தியும், இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வயது வரம்பானது தற்போது மேற்கொள்ளப்பட உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக வெளியிடப்படும் அறிவிக்கைக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இப்பணி நியமனத்திற்கு பிறகு ஆசிரியர் நியமனத்திற்கான உச்ச வயது வரம்பானது திரும்பவும் இதற்கு முன்பு இருந்த நிலையிலேயே தொடரும் எனவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
'சிட்டிஸ்' திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள பள்ளிகளை நவீனமாக்க முடிவு செய்துள்ளனர். சென்னை பள்ளிகள் இதன் மூலம் ரூ.36 கோடி செலவில் நவீனம் செய்யப்பட உள்ளன . இதன் மூலம் 28 பள்ளிகளில் தொடங்கப்பட்ட சிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் டு இன்னோவேட், இன்டக்ரேட் மற்றும் சஸ்டைன் (CITIIS - சிட்டிஸ்) திட்டம் மேலும் 15 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது போக சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திடம் இருந்து கூடுதலாக ரூ.80 கோடி கோரவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில், வகுப்பறைகளில் உள்கட்டமைப்பு, கற்பித்தல் முறை, ஆசிரியர் பயிற்சி, விளையாட்டு போன்ற முழுமையான மாற்றத்தை CITIIS ஏற்படுத்தும். மொத்தமாக பள்ளிகளின் திட்டத்தை மாற்றும் விதமாக இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதன் மூலம் ஜூன் 30, 2023 இல் முடிவடைந்த CITIIS 1.0ஐ நீட்டிக்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஜூன் 30, 2024 வரை இந்த திட்டத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. திட்டத்தை நீட்டிக்கும் திட்டத்தை நீட்டிப்பதற்கான திட்டம் பல்வேறு காரணங்களுக்காக எடுக்கப்பட்டது. டிஜிட்டல் உள்கட்டமைப்பை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும், வகுப்பறைகளை ஸ்மார்ட்டாக மாற்ற வேண்டும், பள்ளி மேலாண்மை அமைப்பு, பள்ளிக்குள் இணைய வசதி ஏற்படுத்துவது, ஹைடெக் லேப் மற்றும் ஸ்மார்ட் போர்டுகள் ஆகியவைகளை அமைப்பது போன்ற காரணங்களுக்காக இந்த திட்டத்தை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.