‘தந்தை வழியில் தனயன்’- மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.;
Kamaraj's birthday function, Chief Minister Stalin interacted with studentsகர்மவீரர், கல்விக்கண் திறந்தவர் என்றெல்லாம் புகழப்படுபவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த பெருந்தலைவர் காமராஜர். சுதந்திரப் போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர், கட்சியின் முழு நேர உழைப்பாளி, கட்சிக்கு பாடுபடுவதற்காகவே தனது சொந்த வாழ்க்கையை திருமணமே செய்து கொள்ளாமல் அர்ப்பணித்தவர், தேச நலன் மட்டுமே தனது நலன், ஏழை மக்கள் அனைவருமே தனது சொந்த மக்கள், இந்திய நாடே தனது குடும்பம் என தனது இறுதி நாள் வரை வாழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
Kamaraj's birthday function, Chief Minister Stalin interacted with studentsஇத்தகைய பன்முக தியாக தன்மையுடைய காமராஜர் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியதற்காக ஒன்பது ஆண்டுகாலம் சிறைவாசத்தை அனுபவித்தவர். அதேபோல தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் 9 ஆண்டு காலம் மக்கள் பணியாற்றியுள்ளார். இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் பதவி அதாவது பிரதமர் பதவி தன்னை தேடி வந்த போது கூட அதனை தான் ஏற்றுக் கொள்ளாமல் இந்திரா காந்திக்கு தாரை வார்த்து அழகு பார்த்தவர் காமராஜர்.
Kamaraj's birthday function, Chief Minister Stalin interacted with studentsகே. பிளான் என ஒரு திட்டத்தை அறிவித்து கட்சி பணிக்காக தனது முதலமைச்சர் பதவியை தானாகவே துறந்தவர் காமராஜர். காமராஜர் தமிழகத்தில் முதல்வராக இருந்தபோது கல்விக்காக ஆற்றிய அவரது பணிகள் அளவிட முடியாதவை. ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்திற்கு சாவு மணி அடித்ததோடு அன்றைய காலகட்டத்தில் பணம் செலுத்தினால் மட்டுமே பள்ளியின் படிக்கட்டுகளை பிஞ்சு குழந்தைகள் கூட மிதிக்க முடியும் என்ற ஒரு சூழல் இருந்தபோது ஏழையும் பாளையும் அடித்தட்டு மக்களும் கல்வி பெறுவதற்காக இலவச கல்வியை கொண்டு வந்தவர் காமராஜர்.
அதனால் தான் தமிழகம் இன்று தொடக்க கல்வி முதல் உயர் கல்வி வரை அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. காரணம் காமராஜர் தனது ஆட்சி காலத்தில் போட்ட அஸ்திவாரம் தான் என்று சொன்னால் மிகை ஆகாது.
Kamaraj's birthday function, Chief Minister Stalin interacted with studentsபெருந்தலைவர் காமராஜர் கல்விக்காக அவர் ஆற்றிய சேவையை முழுதாக உணர்ந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் அவருக்கு மிகப்பெரிய ஒரு பெருமையை வழங்கினார். அதுதான் கல்வி வளர்ச்சி நாள். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என அறிவித்தார்.அந்த அறிவிப்பு இன்று வரை தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Kamaraj's birthday function, Chief Minister Stalin interacted with studentsதந்தை எவ்வழியோ மகனும் அவ்வழியே என்பார்கள் தந்தை வழியில் தகை சால் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின் எந்த முதல்வரும் செய்யாத சிறப்பான பணிகளை இந்த ஆண்டு காமராஜருக்கு செய்து வரலாற்றுச் சாதனையில் இடம் பிடித்து உள்ளார். சென்னை நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் கல்வித் துறை சார்பில் இன்று கல்வி வளர்ச்சி நாள் விழா மற்றும் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் காமராஜர் படத்திற்கு மலர் மாலை அணிவித்து தனது மரியாதையை செலுத்தினார். அத்துடன் தன்னை சந்திக்க வருபவர்கள் அரசு நிகழ்ச்சிகளில் தனக்கு பரிசாக வழங்கப்பட்ட புத்தகங்கள் 7740 எண்ணிக்கையிலான புத்தகங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் வழங்கி அதனை தமிழக அரசின் நூல் நிலையங்களில் பயன்படுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் நிற்கவில்லை அந்த பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ மாணவர்களுடன் தானும் ஒரு மாணவன் போல் அமர்ந்து கலந்துரையாடி இருக்கிறார்.முதல்வர் தங்களது பள்ளிக்கு வந்த மகிழ்ச்சியில் மாணவ மாணவிகள் அவரிடம் கை கொடுப்பதற்கும் செல்பி எடுத்துக் கொள்வதற்கும் ஆர்வம் காட்டினார்கள். எவ்வளவோ பணிகளுக்கும், அரசியல் அழுத்தங்களுக்கு இடையேயும் சற்றும் கோபம் கொள்ளாது, கடுமை காட்டாது குழந்தைகளுடன் தானும் ஒரு குழந்தை போல அமர்ந்திருந்து மகிழ்ச்சியில் திளைத்தார் முதல்வர். அதைக் கண்ட பள்ளியின் ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் திக்கு முக்காடி போனார்கள்.
மேலும் நங்கநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கி அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்.
Kamaraj's birthday function, Chief Minister Stalin interacted with studentsதந்தை அறிவித்ததோ கல்வி வளர்ச்சி நாள் அவரது வழியில் ஆட்சி நடத்தும் தனயன் மு. க. ஸ்டாலினோ மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி இருப்பது தமிழக கல்வியாளர்கள் மத்தியில் நல்ல ஒரு மதிப்புமிகு எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ,சிறுகுறு தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா உள்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.