மாநில அரசிடம் சிறப்பு நிதி கோரிய சென்னை பல்கலைகழகம்
ஊதியம் வழங்குவதில் எழும் சிக்கல்களைத் தவிர்க்க மாநில அரசிடம் ரூ.88 கோடி சிறப்பு நிதியைக் கோரியது சென்னைப் பல்கலைக்கழகம்
நிதிப்பற்றாக்குறையால் ஓய்வூதியம், ஊதியம் வழங்குவதில் எழும் சிக்கல்களைத் தவிர்க்க மாநில அரசிடம் ரூ.88 கோடி சிறப்பு நிதியைக் கோரியது சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டணம் நாட்டிலேயே மிகக் குறைவு, அதை நாம் உயர்த்த வேண்டும். ஒவ்வொரு முறையும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டால், அதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.சமீபத்திய இந்திய தணிக்கை அறிக்கையின்படி, சென்னைப் பல்கலைக்கழகம் தவறான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து நிதி நெருக்கடியை எதிர் கொண்டது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, சம்பளம் மற்றும் வழக்கமான திட்டமில்லா செலவினங்களுக்காக திருப்பி விடப்பட்டதாக கூறியுள்ளது.
பல்கலைக்கழகத்தின் வருமானம் குறைந்துள்ள அதேவேளை செலவுகள் அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய விகிதங்களை அமல்படுத்திய பிறகு அதிகரித்த நிதிச்சுமை காரணமாக பற்றாக்குறை பெருமளவில் உள்ளது.நிதிப்பற்றாக்குறையால் ஓய்வூதியம், ஊதியம் வழங்குவதில் எழும் சிக்கல்களைத் தவிர்க்க சென்னைப் பல்கலைக்கழகம் மாநில அரசிடம் ரூ.88 கோடி சிறப்பு நிதியைக் கோரியுள்ளது